அப்படிப்பட்ட உதவாத வீரர்களுக்காக பயப்படாமா அதை செய்ங்க.. அஜித் அகர்கருக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

Micheal Vaughan 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ரியான் பராக், மயங் யாதவ் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடிய தங்களுடைய அணியின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் விராட் கோலியை கழற்றி விடுவதற்கு தேர்வுக் குழு முடிவு எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் காணப்படுகின்றன. ஏனெனில் பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கொஞ்சம் மெதுவாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ளார்.

- Advertisement -

பயம் வேண்டாம்:
மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் பெரும்பாலும் ஸ்லோவாக இருக்கும். எனவே அங்கு மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகுமுறை பொருந்தாது என்று கருதும் தேர்வுக் குழு அவரை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகிறது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பை உட்பட கடந்த 10 வருடங்களாக விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற சீனியர்கள் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

எனவே வெற்றிக்கு உதவாத சீனியர் வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கு நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு பயப்படாதீர்கள் என்று இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரை கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தைரியமாக இருப்பதற்கு அஜித் அகர்கர் பயப்படக்கூடாது என்பதை மட்டுமே நான் சொல்வேன்”

- Advertisement -

“ஒருவேளை விராட் கோலி அல்லது கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று அவர் நம்பினால் அணியையும் அப்படியே தேர்வு செய்ய வேண்டும். எனவே பெரிய பெயர்களை கொண்ட வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு நீங்கள் உள்ளாகக் கூடாது. ஏனெனில் அவர்கள் உங்களுக்குத் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: இதுல பாண்டியா மேல என்ன தப்புன்னு சொல்லுங்க? விமர்சிக்கும் ரசிகர்கள் அதை புரிஞ்சுக்கனும்.. கங்குலி கருத்து

“அதனால் கடந்த நவம்பர் மாதத்திலும் கடந்த டி20 உலகக் கோப்பையிலும் இருந்தவர்கள் இல்லாத புத்துணர்ச்சியுடன் கூடிய அணியை இம்முறை தேர்வு செய்யலாம். ஒருவேளை இந்தியா வெற்றி பெறுவதற்கு புத்துணர்ச்சியான மனதை கொண்ட வீரர்கள் தேவைப்படலாம். தற்போது அஜித் அகர்கர் 30 வீரர்களை கொண்ட பட்டியலை எடுத்து அதில் தேவையான பவுலர்கள், பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்களை தேர்வு செய்யும் வேலையில் இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement