IPL 2023 : விராட் மீது தப்பில்ல, இந்த மாதிரி ஒரு அடாவடி கோச்’ச பார்த்ததில்லை – கம்பீரை விளாசும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்

Virat Kohli Gambhir.jpeg
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியின் முடிவில் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகனாக கருதப்படும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் மற்றும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலி ஆகியோர் நேருக்கு நேராக சண்டை போட்டுக் கொண்டது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

Naveen Ul Haq Fight

- Advertisement -

அதனால் அதிருப்தியில் இருந்த அவருக்கும் விராட் கோலிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை அமித் மிஸ்ரா மற்றும் நடுவர்கள் தடுத்த நிலையில் போட்டியின் முடிவில் கைகொடுத்துக் கொண்ட போது மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தை கிளன் மேக்ஸ்வெல் தடுத்தார். ஆனால் இவை அனைத்தையும் பெவிலியினில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் லக்னோ அணியின் பயிற்சிளாக இருந்து சண்டையை விலக்காமல் முதல் ஆளாக விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அடாவடி பயிற்சியாளர்:
குறிப்பாக ஒரே மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியும் 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டை போட்ட அவர் சமீப காலங்களாகவே வர்ணனையாளராக தேவையின்றி விமர்சித்த நிலையில் தற்போது பயிற்சியாளராக 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் சண்டை போட்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. முன்னதாக இதே சீசனில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வென்ற பின் பெங்களூரு ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு வாய் மீது கை வைத்து கௌதம் கம்பீர் மிரட்டினார்.

Virat Kohli Gautam Gambhir

அந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி உறுதியான பின்பு அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நவீனுக்கும் லக்னோ ரசிகர்களுக்கும் விராட் கோலி அவ்வாறு பதிலடி கொடுத்தார். ஆனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கம்பீர் கடுப்பில் பயிற்சியாளர் என்பதை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கூட நவீனுடன் மட்டும் தான் விராட் கோலி சண்டையில் ஈடுபட்டார். அந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தான் தேவையின்றி “என்ன சொன்னீங்க இப்போ அதை என்னிடம் சொல்லுங்க? எனது அணி வீரரை சீண்டுவது எனது குடும்பத்தை திட்டுற மாதிரி” என்று விராட் கோலியிடம் வம்பிழுத்ததாக நேரில் பார்த்த நபர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதற்கு “உங்களைப் பற்றி எதுவும் சொல்லாத போது ஏன் தேவையின்றி வருகிறீர்கள்” என்று விராட் கோலி பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதிலிருந்தே போட்டி முடிந்த பின் நடந்த சண்டையில் விராட் கோலி மீது எந்த தவறில்லை என்பதும் கௌதம் கம்பீர் தான் வேண்டுமென்றே வம்பிழுத்ததும் தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டில் களத்தில் விளையாடும் இரு அணி வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆக்ரோசத்துடன் அவ்வப்போது மோதிக் கொள்வது சகஜம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ஆனால் பெவிலியினில் இருந்து வெற்றிக்கான திட்டங்களை வகுக்க வேண்டிய பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் இது போன்ற சண்டைகளை விலக்காமல் முதல் ஆளாக அடாவடித்தனமாக விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் விளையாடும் வீரர்கள் சிறிய மோதல்களை கொண்டிருப்பதை நான் பொருட்படுத்த மாட்டேன். அது வெறும் விளையாட்டாகும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் நீங்கள் அதை பார்க்க விரும்ப மாட்டீர்கள்”

இதையும் படிங்க:IPL 2023 : இப்போவே அந்த ஸ்பெஷல் திறமை இருக்கு, மலிங்காவை விட சிறந்தவரா வருவாரு – பதிரனாவை பாராட்டும் முன்னாள் நியூசி வீரர்

“ஆனால் பயிற்சியாளர்கள் அந்த சண்டையில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. அதிலும் பயிற்சியாளர் அல்லது பயிற்சி குழுவில் இருக்கும் நபர்கள் எப்போதும் களமிறங்கி விளையாடியதை நாம் பார்ப்பதில்லை. எனவே களத்தில் நடப்பது அங்கேயே இருக்கும். ஒருவேளை இரு வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்கள் அதை தடுக்க வேண்டுமே தவிர சண்டையில் ஈடுபடக்கூடாது. பொதுவாக பயிற்சியாளர்கள் வெற்றிக்கான திட்டத்தை வகுத்துக் கொண்டு பெவிலியினில் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement