இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் இடமாக கருதப்படும் ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை சேர்ந்த மதிசா பதிரனா தன்னுடைய வித்தியாசமான சிலிங்கா பந்து வீச்சால் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். இலங்கையைச் சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக சென்னை அணியில் நெட் பவுலராக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் ஏலத்தில் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
அதில் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன பின் கடைசி சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று அசத்திய அவர் மீண்டும் தக்க வைக்கப்பட்டார். அந்த நிலையில் இந்த வருடம் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 7 விக்கெட்களை 8.27 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து வரும் அவர் துசார் தேஷ்பாண்டே போன்ற ரன் மெஷின் பவுலர்கள் ஏற்படுத்தும் பின்னடைவை சரி செய்யும் வகையில் டெத் ஓவர்களில் துல்லியமான யார்கர் பந்துகளால் எதிரணிகளை திணறடித்து சில வெற்றிகளிலும் பங்காற்றியுள்ளார்.
மலிங்காவை விட அதிவேகம்:
குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் வெறும் 9 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் கடைசி ஓவரில் முடிந்தளவுக்கு போராடிய அவர் கடைசி பந்தில் பவுண்டரியை கொடுக்காமல் கிட்டதட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தது சென்னை ரசிகர்களை பாராட்ட வைத்தது. அதனால் ஸ்கோர் கார்டை தாண்டி பதிரனா சிறப்பாக பந்து வீசியதாக கடந்த 2 போட்டிகளின் முடிவிலும் கேப்டன் தோனி வெளிப்படையாக பாராட்டினார்.
Pathirana almost won it for CSK
Baby malinga doing malinga🥵
If not TDP ruining it for us
It would have been a win😭 pic.twitter.com/IWNN8mNez3— vamsHI Krish 🫰 (@urstrulyvamshi7) April 30, 2023
அப்படி அனுபவமற்ற இளம் வயதிலேயே அசத்தலாக செயல்படும் அவர் நாட்கள் செல்ல செல்ல இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்பதால் சென்னை அணிக்கும் இலங்கைக்கும் மலிங்காவை போன்ற ஒரு பவுலர் மீண்டும் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த 3 – 4 வருடங்களை தவிர்த்து பெரும்பாலும் மலிங்கா 140க்கும் குறைவான வேகத்தில் மட்டுமே வீசியதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.
ஆனால் இளம் வயதிலேயே இயற்கையாகவே இப்போதே 140 – 145 கி.மீ வேகத்தில் வீசும் பதிரனா நிச்சயமாக வரும் காலங்களில் மலிங்காவை விட சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “மலிங்காவை விட பதிரனா சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். தனது கேரியரின் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும் அவரை நான் இவ்வாறு சொல்வது சற்று தேவையற்ற பெரிய பாராட்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் இன்னும் அவர் மலிங்காவை போல் துல்லியமாக பந்து வீசவில்லை. ஆனால் 145 கி.மீ வேகத்தில் வீசும் போது தான் மலிங்கா ஆபத்தானவராக இருப்பார்”
“இருப்பினும் அது போன்ற வேகத்தில் அவர் தன்னுடைய கேரியரில் 3 – 4 வருடங்கள் மட்டுமே செயல்பட்டார். அதன் பின் சில மாற்றங்களை செய்த அவர் வேகத்தை குறைத்துக் கொண்டார். அதனால் பெரும்பாலும் அவருடைய வேகம் 135 அளவில் மட்டுமே இருந்தது. இருப்பினும் மெதுவான பந்துகள் மற்றும் துல்லியமான யார்க்கர் பந்துகளால் அவர் நீண்ட காலம் அசத்தினார். மறுபுறம் பதிரனாவை பார்க்கும் போது அவர் இப்போதே 145, 146, 148 கி.மீ வேகத்தில் வீசுகிறார். அதாவது இயற்கையாகவே அவருக்கு வேகம் மிகப்பெரிய சாதகமாக இருந்து வருகிறது”
இதையும் படிங்க:IPL 2023 : தோனி மாதிரி 5 கப் ஜெயிச்சுருக்காரு, ரன்கள் அடிக்கணும்னு அவசியமே இல்ல – ரோஹித் விமர்சனங்களுக்கு ஆஸி வீரர் பதிலடி
“அவர் யார்கர் பந்துகளை சிறப்பாக வீச துவங்கியுள்ளார். எனவே நாட்கள் செல்ல செல்ல அவர் மலிங்காவை போலவே யார்ர்க்கர் பந்துகளை சிறப்பாக வீசுவார். அவரிடம் சற்று அதிகமான வேகம் இருக்கிறது. எனவே அவர் இலங்கை மற்றும் சென்னை அணிக்காக மிகச் சிறந்த திறமையாக காணப்படுகிறார்” என்று கூறினார். முன்னதாக பதிரான எனும் வைரத்தை தோனி பட்டை தீட்டிக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.