IPL 2023 : தோனி மாதிரி 5 கப் ஜெயிச்சுருக்காரு, ரன்கள் அடிக்கணும்னு அவசியமே இல்ல – ரோஹித் விமர்சனங்களுக்கு ஆஸி வீரர் பதிலடி

MI vs CSk
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக ஜொலித்து வரும் மும்பை இந்தியன்ஸ் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதனால் இந்த வருடம் அதிலிருந்து மீண்டெழுந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வரும் அந்த அணி இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போராடி வருகிறது. இருப்பினும் அந்த அணிக்கு பந்து வீச்சு துறையில் டெத் ஓவர்களில் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Rohit Sharma

அதற்கடுத்தபடியாக கேப்டனாக முன்னின்று தொடக்க வீரராக அடித்து நொறுக்க வேண்டிய ரோஹித் சர்மாவின் சுமாரான பேட்டிங் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. ஏற்கனவே 5000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அவர் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதிலும் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக தன்னுடைய கேரியரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அவசியமே இல்ல:
அதே போல சமீப காலங்களில் இந்தியாவுக்காகவும் சுமாராகவே செயல்பட்டு வரும் அவர் இந்த சீசனில் அதிரடியாக விளையாடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினாலும் 1 போட்டியை தவிர்த்து எஞ்சிய 8 போட்டிகளில் சொதப்பலாகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிராக 215 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்தும் போது முதல் ஓவரிலேயே டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் மற்றும் கேப்டன் என்ற இரட்டை மோசமான சாதனையை படைத்தார். இதனால் வழக்கம் போல மீண்டும் விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

CskvsMi

இந்நிலையில் 5 கோப்பைகளை வென்று கொடுத்து மும்பையை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்துள்ள ரோஹித் சர்மா ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் கூட கேப்டனாக தொடர்ந்து வெற்றிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி பாராட்டியுள்ளார். குறிப்பாக சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக திகழும் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி சிறிய இன்னிங்ஸ் விளையாடினாலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து அசத்துவது போல ரோகித் சர்மாவும் மும்பை அணியில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது ஒரு கவலைக்குரிய அம்சமாகும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கண்ணோட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இசான் கிசான் பேட்டிங் ஒரு கவலையாக இருந்தது. ஏனெனில் அந்த 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் சுமாராகவே செயல்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த போட்டியில் இசான் கிசான் அதிரடியாக விளையாடி தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் ரோஹித் சர்மா கவலையளிக்கும் வகையிலேயே செயல்பட்டார். இருப்பினும் மும்பை அணியில் அதிரடியான பேட்டிங் வரிசை ஆழமாக இருப்பதால் ரோகித் சர்மா விஷயத்தில் நீங்கள் இன்னும் காத்திருக்கலாம்”

“ஏனெனில் அவர் கேப்டனாக இப்போதும் மும்பை அணியில் மதிப்பை ஏற்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக சென்னை அணியில் எம்எஸ் தோனியின் மதிப்பை பாருங்கள். பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் விளையாடும் அவர் ஒரு சில தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துகிறார். எனவே பேட்டிங்கையும் தாண்டி ஒரு கேப்டனாக ரோகித் சர்மா நிறைய பங்காற்றி வருகிறார். மேலும் அவர் நிறைய கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனாவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : தோனியை சாய்க்க சந்தீப் சர்மாவுக்கு நான் தான் ஐடியா கொடுத்தேன் – அஷ்வின் போட்ட பிளான் இதோ

அதாவது மும்பை ரசிகர்கள் சொல்வது போலவே ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் ரோகித் சர்மா அந்த அணியில் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement