IPL 2023 : தோனியை சாய்க்க சந்தீப் சர்மாவுக்கு நான் தான் ஐடியா கொடுத்தேன் – அஷ்வின் போட்ட பிளான் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. குறிப்பாக 2019க்குப்பின் தன்னுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் இந்த வருடம் விளையாடி வரும் சென்னை சில போட்டிகளில் வென்றாலும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் போராடி தோற்றதை மறக்க முடியாது. அந்த போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 176 ரன்களை துரத்திய சென்னைக்கு கான்வே 50 (38) ரன்கள், ரகானே 31 ரன்கள் எடுத்தும் கைக்வாட் 8, துபே 8, மொய்ன் அலி 7, ராயுடு 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

RR vs CSK Sandeep Sharma Holder Jaiswal Aadam Azampa

- Advertisement -

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரவீந்திர ஜடேஜா 25* (15) ரன்களை எடுத்தாலும் அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறினார். ஆனால் சமீப காலங்களில் தடுமாறிய கேப்டன் தோனி இந்த வருடம் முதல் போட்டியிலிருந்தே அதிரடியாக விளையாடி வரும் நிலையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றிக்கு போராடினார். குறிப்பாக கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது ஆரம்பத்திலேயே 2 ஒய்ட் பந்துகளை வீசிய சந்திப் சர்மாவின் முதல் பந்தில் ரன்களை எடுக்காத அவர் அதற்கடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார்.

அஸ்வின் பிளான்:
ஆனால் அப்போது சுதாரித்த சந்திப் சர்மா 4வது பந்தில் சிங்கிள் மட்டும் கொடுத்து 4வது பந்தில் ஜடேஜாவுக்கு 1 ரன் மட்டுமே கொடுத்தார். இறுதியில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது மிகச் சிறந்த பினிஷராக கருதப்படும் தோனியால் அடிக்க முடியாத அளவுக்கு துல்லியமான ஸ்லோ யார்க்கர் பந்தை வீசிய சந்தீப் சர்மா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்து அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

Sandeep Sharma 1

இந்நிலையில் அப்போட்டியில் தோனி போன்ற மகத்தான வீரரை அடிக்க விடாமல் செய்வதற்கு இருப்பதிலேயே மிகவும் ரிஸ்க்கான பந்தாக கருதப்படும் ஸ்லோயர் லென்த் பந்தை வீசுமாறு சந்திப் சர்மாவுக்கு ஆலோசனை கொடுத்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்து 30 (22) ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தாம் பிறந்து வளர்ந்த சேப்பாக்கம் மைதானத்தில் தோனியை சாய்ப்பதற்கு சந்திப் சர்மாவுக்கு கொடுத்த திட்டத்தை பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடைசி ஓவரை வீசிய சந்தீப் சர்மாவுக்கு எதிராக தோனி 2 சிக்ஸர்களை அடித்தார். பொதுவாக கடைசி ஓவரில் ஏற்கனவே 2 சிக்ஸர்களை அடித்த தோனி போன்ற ஒருவருக்கு எதிராக அந்த இடத்தில் இருந்து அந்த போட்டியில் மேற்கொண்டு வென்று வருவதற்கான வழி கிட்டத்தட்ட எதுவுமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்திப் சர்மாவிடம் சென்ற நான் “இந்த சமயத்தில் இருப்பதிலேயே மிகவும் ரிஸ்க்கான பந்து எது” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஸ்லோயர் லென்த் பால்” என்று கூறினார்”

Ashwin

“அப்படியானால் அந்த பந்தை நீங்கள் இப்போது முயற்சி செய்யுங்கள் என்று நான் கூறியதை தொடர்ந்து அவரும் அதே போன்ற பந்தை வீசினார். அந்த சமயத்தில் நிச்சயமாக ஒரு பேட்ஸ்மேன் தாம் எதிர்கொள்ளும் பவுலர் ரிஸ்க்கான பந்தை வீசுவார் என்று எதிர்பார்க்க மாட்டார். ஏனெனில் பவுலர் அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார் என்பதை பேட்ஸ்மேன் நன்றாக அறிவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:KKR vs SRH : கடைசி 20 ஆவது ஓவர் போட்டப்போ எனக்கு இப்படி இருந்துச்சி தெரியுமா? – ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி பேட்டி

அதாவது எப்படியும் கடைசி பந்தில் இருப்பதிலேயே தரமான பந்தை சந்திப் சர்மா வீசுவார் என்று தோனி எதிர்பார்த்திருப்பார் என அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு நேர் மாறாக பவுலர்களை பொறுத்த வரை ரிஸ்க்கான பந்தாக ஸ்லோயர் லென்த் பந்தை சிறப்பாக வீசி சந்திப் சர்மா வெற்றி பெற வைத்ததாக அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement