KKR vs SRH : கடைசி 20 ஆவது ஓவர் போட்டப்போ எனக்கு இப்படி இருந்துச்சி தெரியுமா? – ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி பேட்டி

Varun-Chakaravarthy
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 47-வது லீக் போட்டியானது நேற்று ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கடைசி பந்து வரை திரில்லிங்காக சென்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

Varun Chakravarthy

- Advertisement -

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது துவக்கத்திலேயே அபிஷேக்சர்மா (9), மாயங்க அகர்வால் (18), ராகுல் திருப்பாதி (20), ஹாரி புரூக் (0) ஆகியோரது விக்கெட்டை இழந்தாலும் எய்டன் மார்க்கம் (41) மற்றும் கிளாசன் (36) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக சன் ரைசர்ஸ் அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் நல்ல நிலையில் இருந்து சன் ரைசர்ஸ் அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையிருந்தது.

அப்போது அவர்களே எளிதில் வெற்றி பெறுவார்கள் என்ற இருந்து அந்த அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அந்த கடைசி ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்களை வீசிய வருண் சக்கரவர்த்தி அந்த 18 பந்துகளில் எட்டு டாட்பால் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணியை வெற்றி அழைத்து சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

Varun Chakaravarthy 1

அதேபோன்று போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் 19-வது ஓவரில் 12 ரன்கள் கிடைக்கவே போட்டியின் கடைசி 20-ஆவது ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது அந்த கடைசி ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாகவே அவருக்கே இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்தி தன்னுடைய சிறப்பான செயல்பாடு குறித்து கூறியதாவது : இந்த போட்டியின் கடைசி ஓவரை நான் வீச வரும்போது என்னுடைய ஹார்ட் பீட் 200-ஆக இருந்தது. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்திக் கொண்டு நான் பேட்ஸ்மேனை பெரிய பகுதியில் அடிக்க வைக்க வேண்டும் என்று பந்து வீசினேன். ஈரம் காரணமாக கையில் இருந்து பந்து வழுக்கினாலும் என்னுடைய பெஸ்ட்டை நான் வழங்கவேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : IPL 2023 : சுனில் நரேனின் 11 வருட தனித்துவ சாதனையை தகர்த்த வருண் சக்கரவர்த்தி – இரட்டை ஐபிஎல் வரலாற்று சாதனை

என்னுடைய முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அந்த ஓவரில் அடித்திருந்தார். ஆனாலும் நான் கடைசிவரை சிறப்பாக பந்து வீசுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அதோடு மைதானத்தின் பெரிய பகுதியில் அப்துல் சமாத்தை அடிக்க வைத்ததால் விக்கெட்டும் கிடைத்தது. இறுதியில் நாங்கள் வெற்றியும் பெற்றோம் என வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement