இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதோடு அடுத்தடுத்து தான் டி20 லீக் தொடர்களில் விளையாட இருப்பதாக அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025-ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலகெங்கிலும் இருந்து 1574 வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சனை வாங்கப்போகும் அணி இதுதான் :
இவ்வேளையில் தற்போது முதல் முறையாக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் தனது பெயரை ஜேம்ஸ் ஆண்டர்சன் பதிவு செய்துள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் தான் எந்த அணிக்காக வாங்கப்பட்டாலும் நிச்சயம் அந்த அணிக்காக என்னுடைய முழு பங்களிப்பை வழங்குவேன் என்றும் 50 வயது வரை என்னால் விளையாட முடியும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு சில அணிகள் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இன்ஸ்விங் மற்றும் ஸ்விங்விங் தெரிந்த பவுலர்களை விரும்பும்.
அந்த வகையில் பார்க்கையில் ஏற்கனவே சென்னை அணியில் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாகர் போன்ற ஸ்விங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் வைத்திருந்ததால் என்னை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியால் வாங்கப்பட்டாலும் அது ஆச்சரியம் இல்லை. அதோடு சென்னை அணி எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரையோ அல்லது வயது முதிர்ந்த வீரரையோ வாங்க தயங்கியதில்லை.
அதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் சென்னை அணியால் வாங்கப்படுவார் என்று தெரிவதாக மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே எப்பொழுதுமே பார்ம் அவுட்டான அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சற்று இடைவெளி உள்ள வீரரை தேர்வு செய்து அந்த வீரரை மெருகேற்றிக் காட்டும் வழக்கம் கொண்ட சென்னை அணி ஆண்டர்சனை வாங்கினாலும் ஆச்சரியப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கழற்றி விட பார்க்கும் இந்திய அணியில் இதை செய்யவே.. லக்னோ அணியிலிருந்து வெளியேறுனேன்.. ராகுல் பேட்டி
கடந்த 2014 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக டி20 வடிவ போட்டிகளில் விளையாடாமல் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே பயணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.



