கழற்றி விட பார்க்கும் இந்திய அணியில் இதை செய்யவே.. லக்னோ அணியிலிருந்து வெளியேறுனேன்.. ராகுல் பேட்டி

Kl rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய அவர் 2018, 2019 ஐபிஎல் தொடர்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடி அசத்தினார். அதனால் இந்திய அணியில் தவானை பின்னுக்கு தள்ளிய அவர் ரோஹித் சர்மா களமிறங்கும் துவக்க வீரராக முன்னேறி துணை கேப்டனாகவும் முன்னேறினார்.

ஆனால் நாளடைவில் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மெதுவாக விளையாடிய அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக டி20 அணியில் கழற்றி விடப்பட்ட அவர் 2023 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடி அசத்தினார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய அவர் லக்னோ அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

கழற்றி விடப்படும் ராகுல்:

சொல்லப்போனால் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியின் முடிவில் சுமாராக விளையாடிய ராகுலை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் பொதுவெளியில் திட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது. அந்த வகையில் சுமாராக செயல்பட்ட ராகுல் இந்திய ஒருநாள் அணியிலும் கழற்றி விடப்பட்டார். தற்போது வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சுமாராக விளையாடியுள்ளார்.

அதன் காரணமாக டெஸ்ட் அணியிலும் அவர் கழற்றி விடப்படும் சூழ்நிலையில் இருக்கிறார். அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் அவரை லக்னோ அணி நிர்வாகம் தக்க வைக்காமல் கழற்றி விட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக சுதந்திரத்துடன் விளையாடுவதற்காகவே லக்னோ அணியிலிருந்து வெளியேறியுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் கம்பேக்:

அங்கே சிறப்பாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய டி20 அணியில் நான் நீண்ட காலமாக இல்லை. ஒரு வீரராக நான் தற்போது எங்கே இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: இது பிச்சைக்கார நம்பிக்கை.. ஆஸ்திரேலியாவில் யார் அதை ரத்து செய்தது? இந்தியாவை விளாசிய கவாஸ்கர்

“மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். எனவே இந்த ஐபிஎல் தொடரில் என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்காக ஆவலுடன் உள்ளேன். இந்திய டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை இலக்காகும்” என்று கூறினார்.

Advertisement