நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவதற்காக இந்தியா ஏ அணி பெர்த் நகரில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
அது போக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணிக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடும் ஒரு பயிற்சி போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த 2 போட்டிகளும் தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் முக்கிய வீரர்கள் காயத்தை சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் அந்த முடிவெடுக்கப்பட்டதாக நியூசிலாந்து தொடரின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாக தெரிவித்தார்.
கவாஸ்கர் விளாசல்:
இந்நிலையில் அந்த பயிற்சி போட்டிகளை இந்தியா ரத்து செய்தது ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கு உதவாது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியில் விளையாடும் முடிவை யார் எடுத்திருந்தாலும் அது சரியானது என்றே நான் நம்புகிறேன்”
“பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்தது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியா விளையாடுவதற்கு திண்டாடியது. அந்த போட்டிகளில் நான்காவது இன்னிங்சில் 150 ரன்கள் கூட நம்மால் அடிக்க முடியாது என்ற கற்பனை ஏற்பட்டது”
பயிற்சி போதுமா:
“ஆம் அந்த பிட்ச்கள் சவாலாக இருந்தது. ஆனால் அது விளையாடுவதற்கு சாத்தியமற்றது என்று இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாட இருந்த பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது பிச்சைக்காரத்தனமான நம்பிக்கையாகும். ஏனெனில் உண்மையான போட்டியில் களத்திற்கு வந்து பந்தை பேட்டின் நடுப்பகுதியில் எதிர்கொள்வதை சிறந்த உணர்வு கிடைக்காது”
இதையும் படிங்க: என்னை பாராட்ட ஒன்னுமில்ல.. இதை மட்டுமே செஞ்சேன் இது ஆரம்பம் மட்டுமே.. சஞ்சு சாம்சன் பற்றி கம்பீர் பேட்டி
“வலைப்பயிற்சியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் களத்தில் பேட்டை சுழற்றும் வேகம் கிடைக்காது. பயிற்சி போட்டிகளில் விளையாடும் போது முக்கிய பேட்ஸ்மேன்கள் காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் வலைப்பயிற்சி செய்யும் போதும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. பயிற்சியில் அவுட்டானாலும் மீண்டும் விளையாடலாம் என்பதால் அழுத்தம் இல்லாமல் பேட்ஸ்மேன்கள் விளையாடுவார்கள். பவுலர்களும் நோ-பால் போட்டாலும் கவலையில்லை என்ற வகையில் பயிற்சி எடுப்பார்கள். எனவே பயிற்சியில் யாரும் சரியான போட்டியை கற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.



