
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அந்த வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.
சொல்லப்போனால் முதல் போட்டியிலேயே 89 ரன்கள் குவித்த அவர் இந்தப் போட்டியில் சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கினார். அதே வேகத்தில் பட்டாசாக விளையாடிய அவர் 11 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். அதன் வாயிலாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனையும் படைத்தார்.
அந்த வகையில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். முன்னதாக அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டி இரண்டரை நாட்களில் முடிந்தது. அதனால் போட்டி முடிந்ததும் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பொழுது போக்கிக்கொள்ள அடிலெய்ட் மைதான நிர்வாகம் அனுமதித்தது.
அதன் காரணமாக பிட்ச் இருக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் அடிலெய்ட் மைதானத்திற்குள் வந்து தங்களுடைய நேரத்தை செலவிட்டனர். இந்நிலையில் அதை புகைப்படம் எடுத்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியாவுக்கு இந்த ஃபீல்டிங் தான் தேவைப்படுகிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதாவது 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் சதத்தை அடித்த டிராவிஸ் ஹெட் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சதத்தை அடித்த அவர் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்படி இந்தியாவுக்கு எதிராக அவர் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க: எல்லா நேரமும் பும்ரா காப்பாத்த மாட்டாரு.. அவங்களுக்கும் பொறுப்பு வேணும்.. இந்திய அணி மீது ரோஹித் ஏமாற்றம்
மறுபுறம் அவரை பெரும்பாலான போட்டிகளில் விரைவில் அவுட்டாக்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. எனவே அடிலெய்ட் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களைப் போன்ற ஃபீல்டிங் வைத்தால் மட்டுமே அவரை இந்தியாவால் அவுட்டாக்க முடியும் என்று மைக்கேல் வாகன் கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு இந்திய அணி மற்றும் ரசிகர்களின் தோல்வி வேதனையில் உப்பை தடவுவது போல் அமைகிறது.