எல்லா நேரமும் பும்ரா காப்பாத்த மாட்டாரு.. அவங்களுக்கும் பொறுப்பு வேணும்.. இந்திய அணி மீது ரோஹித் ஏமாற்றம்

rohit sharma 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ரா தலைமையில் விளையாடிய முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்து தொடரில் முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் தொடரை சமன் செய்துள்ள ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு சுமாரான பேட்டிங் முக்கிய காரணமானது. குறிப்பாக இத்தொடரில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42, 42 ரன்கள் குவித்தார். விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் யாருமே 40 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

ரோஹித் ஏமாற்றம்:

அதே போல பந்து வீச்சில் பும்ரா மட்டுமே அபாரமாக செயல்பட்டார். ஆனால் சிராஜ் நான்கு விக்கெட்டுகள் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கினார். நித்திஷ் ராணா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் சரமாரியான அடி வாங்கினார். இந்நிலையில் பும்ரா எல்லா நேரத்திலும் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து மற்ற இந்திய பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது சிட்னி போட்டியை நான் சிந்திக்கவில்லை. பிரிஸ்பேனில் நடைபெறும் அடுத்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கிறேன். பும்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அனைத்து நேரங்களிலும் அவர் மட்டுமே வேலையை செய்ய முடியாது. இப்போட்டியில் சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்து பொறுப்பை பகிர்ந்து கொண்டார்கள்”

- Advertisement -

அணியாக அசத்தனும்:

“பும்ரா சில நேரங்களில் விக்கெட்டுகளை எடுக்க மாட்டார். அப்போது மற்ற பவுலர்கள் முன்னே வரவேண்டும். இது ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் பும்ரா ஒவ்வொரு போட்டியிலும் புத்துணர்ச்சியுடன் இருந்து விளையாடுவது அவசியம். அதனால் ஒவ்வொரு முறையும் அவரிடம் உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது என்பது பற்றி நான் தொடர்ந்து பேசினேன்”

இதையும் படிங்க: இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் மோசமான சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

“அவருடைய பணிச்சுமையை ஆராய்வது அவசியம். நீங்கள் மைதானத்தின் இருபுறமும் காலையிலும் மாலையிலும் பும்ரா பந்து வீசுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் ஒரு போட்டி அல்லது தொடரை வெல்ல விரும்பினால் அதற்கு மொத்த பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிப்பது அவசியம். தனிநபர்களால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது. அதைத் தான் நான் இந்த அணியில் பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement