இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு நகரில் இன்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
மோசமான கேப்டன் ரோஹித் சர்மா :
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 157 ரன்கள் என்கிற மிகப்பெரிய முன்னிலையை ஆஸ்திரேலிய அணி பெற்றது அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.
அதை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 175 ரன்கள் மட்டுமே அடிக்க 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை விக்கெட் இழப்பின்றி பூர்த்தி செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ததோடு இந்த தொடரையும் ஆஸ்திரேலிய அணி தற்போதைய நிலையில் சமன் செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த இரண்டாவது போட்டியின் தோல்வியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளை தோல்வியை சந்தித்த கேப்டன் என்ற சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 1967-68 ஆண்டுகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த மேக் படவுடி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை மோசமான கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் இந்த 2 கேப்டன்ஷிப் தவறு தான் படுதோல்விக்கு காரணம்.. பேட்டிங் அதுக்கு மேல.. பசித் அலி
அதனை தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தோல்வியை சந்தித்து இரண்டாவது இடத்தில் இருந்தார். அதற்கடுத்து தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்த கேப்டனாக தத்தா கெய்க்வாட், தோனி, விராட் கோலி ஆகியோர் இருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மாவும் தொடர்ச்சியாக நான்காவது டெஸ்ட் தோல்வியை சந்தித்து இந்த மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.