IND vs ENG : மீண்டும் தப்பு பண்ணிட்டீங்க, தமிழக வீரருக்காக இந்திய நிர்வாகத்தை காரணத்துடன் விளாசும் ரசிகர்கள்

ashwin 1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று மதியம் 3 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்கியது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இங்கிலாந்துக்குச் சென்ற விராட் கோலி தலைமையிலான இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த முக்கிய போட்டியை கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் வென்று 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவும் புத்துயிர் பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 2 – 2 என்ற தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர இங்கிலாந்தும் போராடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின்:
இப்போட்டியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தமிழகத்தின் அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது முன்னாள் வீரர்களையும் ரசிகர்களையும் அதிருப்திடைய வைத்துள்ளது. ஏனெனில் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்குப் பின் கடந்த பல வருடங்களாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் தற்போது ஐசிசி தரவரிசையில் டாப் 10 பந்து வீச்சாளர்களின் பட்டியலில் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் ஒரே சுழல் பந்து வீச்சாளராக இடம் பிடித்துள்ளார். மேலும் இதுவரை 5 சதங்களை அடித்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆல்-ரவுண்டராகவும் திகழ்கிறார்.

ஆனால் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் தடுமாறினார் என்பதற்காக இவரை நம்பாத விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி கடந்த வருடம் நடந்த முதல் 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கவில்லை. இத்தனைக்கும் கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அப்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் காலி செய்த அவர் இதே இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2 இன்னிங்சிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறிய போது நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

மீண்டும் ஏமாற்றம்:
அப்படி உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்துவீச்சாளராக நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள அவருக்கு வாய்ப்பளிக்குமாறு பல ஜாம்பவான்கள் கேட்டுக்கொண்ட போதிலும் கடைசி வரை அதை விராட் கோலி காதில் வாங்கவில்லை. ஆனால் இம்முறை மீண்டும் அதே தவறை இந்தியா செய்யக்கூடாது என்று கடந்த சில தினங்களாகவே கிரேம் ஸ்வான், ஷேன் வாட்சன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தற்போது ராகுல் டிராவிட் – பும்ரா என்ற புதிய கூட்டணி வந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதை வேடிக்கையான முடிவு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டரில் விமர்சித்துள்ளார். இதுபோக மேலும் ஒருசில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சரி இப்போட்டியில் அஷ்வினை தேர்வு செய்யாமல் இந்தியா செய்த தவறைப் பற்றி அலசுவோம்:

- Advertisement -

1. முதலில் சற்று பேட்டிங் செய்யக்கூடியவர் வேண்டும் என்பதற்காக ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஜடேஜா தடுமாறியதும் ராஜஸ்தானுக்காக முதல் முறையாக தனது கேரியரில் அஷ்வின் அரைசதம் அடித்ததையும் வைத்து யார் நல்ல பார்மில் உள்ளார்கள் என்று ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

2. மேலும் இப்போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் சுழல் பந்துவீச்சு ஓரளவு எடுபடும் என்று பிட்ச் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் கடைசியாக இந்த மைதானத்தில் கடந்த 2018ல் இந்தியா விளையாடிய போது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்கள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் அந்த குறிப்பிட்ட போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக அசத்தினார்.

இதையும் படிங்க : ஆஹா என்ன ஒரு எளிமை, மரத்தடி மருத்துவரிடம் சிகிக்சை பெற்ற தல தோனி – முழுவிவரம் இதோ

3. இதுபோக இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் அலெஸ் லீஸ், பென் ஸ்டோக்ஸ் என 2 முக்கிய வீரர்கள் இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களை அதிகமுறை அவுட் செய்த பவுலர் என்ற உலக சாதனையை படைத்துள்ள அஷ்வினை இப்போட்டியில் இந்தியா தவறவிட்டதா என்று இனி ரசிகர்களான நீங்களே தெரிவியுங்கள்.

Advertisement