- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவாஸ்கரை இப்படி புண்படுத்திருக்கக்கூடாது.. அதுக்கு அதிர்ஷ்டம் பண்ணிருக்கனும்.. ஆஸி மீது கிளார்க் அதிருப்தி

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கும் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்தது.

முன்னதாக அந்தத் தொடரின் கோப்பையை ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு பரிசாக கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கவாஸ்கரை கழற்றி விட்ட ஆஸ்திரேலியா வாரியம் பார்டர் கைகளால் மட்டும் கோப்பையை தங்களுடைய அணிக்கு கொடுத்து அழகு பார்த்தது. மறுபுறம் இந்தியர் என்பதால் ஆஸ்திரேலிய வாரியம் தம்மை இவ்வாறு மறைமுகமாக அவமானப்படுத்தியதாக கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கவாஸ்கர் ஏமாற்றம்:

இந்தியா தோற்றிருந்தாலும் கோப்பையின் பெயரில் தம்முடைய பெயர் இருப்பதால் தாமும் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கியிருப்பேன் என்றும் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தக் கோப்பையை சுனில் கவாஸ்காரும் வழங்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலிய வாரியம் ட்ரிக்கை தவற விட்டது என்று நினைக்கிறேன். அதே சமயம் இந்தியா வென்றால் கவாஸ்கரும் ஆஸ்திரேலியா வென்றால் பார்டரும் கோப்பையை பரிசாக கொடுப்பார்கள் என்பது தொடருக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். எனவே அவர்கள் இருவரும் சேர்ந்தால் போல் கோப்பையை பரிசளிக்காதது எனக்கு ஆச்சரியமில்லை”

- Advertisement -

கிளார்க் அதிருப்தி:

“ஆனால் அவர்கள் இருவரும் வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னுடைய கருத்துப்படி யார் வென்றார்கள் என்பதை தாண்டி கோப்பையை வழங்க அந்த இருவரும் மேடையில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் சேர்ந்து வழங்கியிருக்க வேண்டும். ஆலன் பார்டர் – சுனில் கவாஸ்கர் ஆகிய இருவருமே ஒரே சமயத்தில் நம் நாட்டில் இத்தொடருக்காக வர்ணனை செய்வதை பார்ப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: கம்பீரின் கோரிக்கையை ஏற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ

“கோப்பைக்கு பெயிரிடப்பட்ட 2 ஜாம்பவான்களும் ஒரே சமயத்தில் நம் நாட்டில் இருக்கிறார்கள். அது போன்ற வாய்ப்பை நாம் பயன்படுத்தாமல் இப்படி தவற விட்டிருக்க கூடாது. அது கவாஸ்கரை புண்படுத்தியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் இருவரும் கோப்பையை வழங்க மேடையில் இருந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.

- Advertisement -