கம்பீரின் கோரிக்கையை ஏற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ

Gambhir-and-Nitish
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி 5 போட்டிகளில் விளையாடி 9 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 298 ரன்களை குவித்து அசத்தினார். அதோடு பந்து வீச்சிலும் கைகொடுத்த அவர் இந்திய டெஸ்ட் அணியில் ஹார்டிக் பாண்டியாவை இடத்தை பூர்த்தி செய்ய சரியான நபர் என்று பேசப்படுகிறது.

நிதீஷ் ரெட்டி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு :

அதோடு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் இனி தொடர்ச்சியாக தேர்வாவர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் தனக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பிலேயே அசதலாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இதன்காரணமாக அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரந்தர இடம் பிடிப்பார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் பயிற்சியாளர் கம்பீர் வீரர்கள் மீது மிகவும் கடும் அதிருப்தியில் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது.

அதேபோன்று ஆஸ்திரேலியா தொடர் முடிந்த கையோடு முழு உடற்தகுதியுடன் இருக்கும் எந்த ஒரு வீரரும் உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என்று அவர் கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக்கின. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரின் நாக் அவுட் சுற்றுப்போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றனர்.

- Advertisement -

அதேவேளையில் கே.எல் ராகுல் இங்கிலாந்து தொடருக்ககாக தயாராக இருப்பதால் இந்த விஜய் ஹசாரே தொடரில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில் கம்பீரின் அறிவிப்பை அடுத்து முதல் நபராக தற்போது நிதீஷ் ரெட்டி ரஞ்சி தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகளில் தான் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியை வதம் செய்த ஸ்காட் போலந்து கண்டுள்ள முன்னேற்றம் – பும்ரா தொடர்ந்து முதலிடம்

அதற்கு முக்கிய காரணம் யாதெனில் : ரஞ்சி தொடரில் மீண்டும் விளையாடுவதின் மூலம் அடுத்து இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வு செய்வதற்கு தயார்படுத்தும் வகையில் அந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement