சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் நீடிக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா :
அந்த வகையில் வெளியாகிய இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்திலும், அடுத்தாக தென்னாப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலந்து 29 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரரான விராட் கோலியை 5 இன்னிங்ஸ்களில் நான்கு முறை வீழ்த்திய அவர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் இந்த முன்னேற்றத்தினை கண்டுள்ளார். அதேபோன்று டாப் டெல்லியில் மற்றொரு இந்திய வீரராக ஜடேஜா மட்டும் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : காயத்தால் பும்ரா வேணாம்.. இந்த 2 பேர் தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக சரியானவங்க.. ஃகைப் பேட்டி
வரை தவிர்த்து வேறு எந்த இந்த இந்திய பந்துவீச்சாளரும் இந்த டாப் 10-ல் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



