- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரை எடுக்காம விட்டது மூளையற்ற முடிவு.. 5 சதமடிச்சாலும் இந்தியா ஜெய்க்க இதை செய்யனும்.. மைக்கேல் கிளார்க்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அந்தப் போட்டியில் 5 சதங்களை அடித்த இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால் பேட்டிங் துறையில் நன்றாக ஃபினிஷிங் செய்யாததும் 7 கேட்ச்களை தவற விட்டதும் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

அதே போல பவுலிங் துறையில் பும்ராவை தவிர்த்து மற்றவர்கள் கை கொடுக்காதது தோல்விக்கு மற்றொரு காரணமானது. அதன் காரணமாக 2வது போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2வது போட்டியில் குல்தீப் யாதவை இந்தியா விளையாட வைக்க வேண்டும் என்று 2015 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தேவையான மாற்றம்:

அதே போல பேட்டிங்கில் போதுமான ரன்களை அடித்தாலும் இங்கிலாந்தில் வெற்றி பெற பவுலிங் துறையில் 20 விக்கெட்டுகள் எடுப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையில் பவுலிங் செய்ததாக அதிருப்தியை வெளிப்படுத்தும் கிளார்க் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பவுலிங் துறையில் தனிப்பட்ட வீரர்களை யாரையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை”

“ஆனால் அவர்கள் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும். அது முற்றிலும் மூளையற்ற முடிவாக இருக்காது. விக்கெட் டேக்கிங் பவுலரான அவர் முதல் போட்டியை விட இந்தியாவுக்கு அதிகமான விஷயங்களை செய்து கொடுப்பார். இந்தியா ஒரு விஷயத்தை நீண்ட காலமாக செய்து வருகிறது. அதாவது அவர்கள் பேட்டிங் துறையில் அதிக அக்கறையை காண்பிக்கிறார்கள்”

- Advertisement -

5 சதங்கள் அடிச்சாலும் முடியாது:

“அல்லது பேட்டிங் வரிசையில் ஆழத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் நம்பர் ஒன் ஸ்பின்னரை விளையாட வைக்காமல் ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் வெற்றி பெற நீங்கள் 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். பும்ரா நட்சத்திரத்தைப் போல அசத்தினார். ஆனால் மற்ற பவுலர்களும் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விக்கெட்டுகள் எடுப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: இதை செய்யாம பாகிஸ்தானை தோற்கடிச்சு என்ன யூஸ்? ரிஷப் பண்ட் 70க்கு சமம்.. 2024 டி20 உ.கோ பற்றி ரோஹித்

“நான் நினைத்த அளவுக்கு ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக அவர் காலடித் தடங்களை (ரஃப்) பயன்படுத்தி பவுலிங் செய்யவில்லை. அதை விட்டுவிட்டு அவர் நேராக அதிகம் பவுலிங் செய்ததாக எனக்குத் தோன்றியது” என்று கூறினார்.

- Advertisement -