பிட்ச்ல கைவெச்சா இந்தியாவை.. தெறிக்க விட ஜடேஜாவுக்கு நிகரான ஸ்பின்னர் எங்களிடம் இருக்காரு.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து அந்த மிகப்பெரிய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக வந்தது முதல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணிகளை பந்தாடும் நாங்கள் இம்முறை இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் ஒருவேளை இம்முறையும் முதல் நாளிலேயே தாறுமாறாக சுழலக்கூடிய பிட்ச்களை வேண்டுமென்றே india அமைத்தால் அதில் சிறப்பாக செயல்பட்டு தெறிக்க விடுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

எச்சரித்த வாகன்:
இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இத்தொடரில் முதல் பந்தே சுழலும் அளவுக்கு பிட்ச் இருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும். ஏனெனில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தால் இங்கிலாந்து ஜேக் லீச்சை அணிக்குள் கொண்டு வரும். அவர் ரவீந்திர ஜடேஜாவை விட சிறந்த ஸ்பின்னரா? என்று கேட்டால் இல்லை”

“ஆனால் சுழலுக்கு சாதகமான மைதானங்களை நீங்கள் கொடுத்தால் அதில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பின்னர் இலக்கை கட்டுப்படுத்துவதற்கு அவர் சரியான ஸ்பின்னர். அதே போல பந்து ஆரம்பத்திலேயே அதிகமாக சுழன்றால் அதில் தடுமாறக்கூடிய இந்திய பேட்டிங்கை இங்கிலாந்து ஆல் அவுட் செய்து விடும். ஒருவேளை பிட்ச் ஃபிளாட்டாக இருந்தால் இந்தியா ஆயிரக்கணக்கான ரன்கள் அடிக்கும்”

- Advertisement -

“அங்கே இந்திய பவுலர்கள் பதிலுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்ய வேலை செய்ய வேண்டும். மேலும் இங்கிலாந்தின் அதிரடியான அணுகு முறையில் அனைத்து எதிரணிகளும் ஒருநாள் அடி வாங்கியது என்பதை நினைத்து இந்தியா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களை பாருங்கள்”

இதையும் படிங்க: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாத தல தோனி.. பின்னால் இருக்கும் காரணம் – என்ன தெரியுமா?

“அதனால் ஒருவேளை இங்கிலாந்து சாதாரணமாக விளையாடும் என்று எதிர்பார்த்து இத்தொடருக்கு இந்தியா வந்தால் அவர்களுக்கு ஆச்சரியம் தான் காத்திருக்கும். இங்கிலாந்துக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் இந்தியாவில் நீங்கள் ஒரே வழியில் விளையாடி வெல்ல முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement