இவரு பாராட்டுறாரா? இல்ல கிண்டல் பண்றாரா? இந்திய அணியின் பேட்டிங் குறித்து – மைக்கல் வாகன் போட்ட பதிவு

Michael-Vaughan and IND Team
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சட்டகிராம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் இருந்து கவுரவமாக வெளியேறியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டன்சி செய்தார். ரோகித்துக்கு பதிலாக இடம் பிடித்த துவக்க வீரரான இஷான் கிஷன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை இரட்டை சதமாக பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

கூடவே விராட் கோலியும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்தது. பின்னர் 410 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 34 ஓவர்களில் 182 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் காரணமாக இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் எப்பொழுதுமே இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் விமர்சித்து வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி குறித்தும், இந்திய அணி விளையாட வேண்டிய விதம் குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் விசித்திரமான ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

எப்பொழுதுமே இந்திய அணி குறித்து குறைத்து பேசும் தன்மை உடைய மைக்கேல் வாகன் இம்முறை அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது : இப்படித்தான் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று ராக்கெட் குறியீடு பயன்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : அதை பற்றி கவலைபடாமல் அடிச்சு அப்பாவிடம் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன் – சாதித்த இஷான் கிசான் பேட்டி

இதன் மூலம் இந்திய அணி ராக்கெட் வேகத்தில் விளையாடியது நல்லது இப்படியே விளையாட வேண்டும் என்று அவர் பாராட்டுகிறாரா? அல்லது இங்கிலாந்து அணியுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்கிறாரா? என்று புரியவில்லை. இருப்பினும் அவர் பதிவிட்ட இந்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களது பதிலை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement