அதை பற்றி கவலைபடாமல் அடிச்சு அப்பாவிடம் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன் – சாதித்த இஷான் கிசான் பேட்டி

Ishan-Kishan
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா சம்பிரதாய கடைசி போட்டியில் அதிரடியாக செயல்பட்டு ஆறுதல் வெற்றியுடன் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்தது. சட்டகிரோம் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் சரவெடியாக செயல்பட்டு 409/8 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்தது.

Ishan Kishan 1

- Advertisement -

அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிசான் இரட்டை சதமடித்து 210 (131) ரன்களும் விராட் கோலி சதமடித்து 113 (91) ரன்களும் விளாசினர். அதை தொடர்ந்து 410 ரன்களை துரத்திய வங்கதேசம் இம்முறை இந்தியாவின் சுதாரிப்பான பந்து வீச்சில் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவரில் 182 ரன்களுக்கு சுருண்டது.

அப்பாவிடம் கொடுத்த வாக்கு:

அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் எடுத்தார். அதனால் 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை சுவைத்து இத்தொடரை இழந்தாலும் முறுக்கிய மீசையுடன் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

Ishan Kishan Vs BAN

முன்னதாக இப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இஷான் கிசான் எரிமலையாக பேட்டிங் செய்து 24 பவுண்டரி 10 சிக்ஸருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையும் தகர்த்து புதிய உலக சாதனைகளை படைத்தார். இருப்பினும் 40 ஓவருக்குள் ஆட்டமிழந்த அவர் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் 300 ரன்கள் அடித்திருப்பேன் ஆனால் அதை தவற விட்டு விட்டுவிட்டேன் என்று போட்டியின் முடிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அவரது அந்த தன்னம்பிக்கை அனைவரது பாராட்டுகளை பெற்ற நிலையில் இத்தொடரில் வாய்ப்பு கிடைத்தால் குறைந்தது 150 ரன்களை எடுக்காமல் அவுட்டாக மாட்டேன் என்று தனது தந்தையிடம் சொல்லிவிட்டு இந்த தொடருக்கு தேர்வான போது வீட்டிலிருந்து கிளம்பியதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் இசான் கிசான் அந்த வாக்கை காப்பாற்ற ஸ்கோரை பார்க்காமல் தொடர்ந்து விளையாடியதே இரட்டை சதமடிக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது பற்றி போட்டி முடிந்த பின் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

ishan kishan 2

“அது இன்று நடக்கும் என்று தெரியாது. ஆனால் தீவிரமாக சொல்ல வேண்டுமெனில் இத்தொடரில் பங்கேற்க பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிய போது ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் குறைந்தது 150 ரன்கள் அடிப்பேன் என்று எனது தந்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். அதனால் எனது தந்தை மிகவும் நேர்மறையுடன் என்னை வழி அனுப்பியது மிகவும் முக்கியமானதாகும். இப்போட்டியில் 100 ரன்கள் அடித்த பின்பு நான் ஸ்கோர் போர்ட்டை பார்க்கவில்லை. பிட்ச்சை மட்டும் பார்த்து அதற்கு தகுந்தார் போல் தொடர்ந்து அடித்தேன். அதன் பின் மீண்டும் பார்த்த போது 146 ரன்களில் இருந்த ஸ்கோர் சற்று நேரம் கழித்து பார்த்த போது 190 ரன்களில் இருந்தது”

இதையும் படிங்க: அவரு இவ்ளோ ஸ்கோர் அடிப்பாருன்னு நான் நெனைக்கல. வெற்றிக்கு பிறகு – ராகுல் பேசியது என்ன?

“அப்போது தான் இந்த அளவுக்கு வந்து விட்ட நாம் நிச்சயம் 200 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போட்டியை போல அதிரடியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாகும். மேலும் ஒரு முறை நான் செட்டிலாகி விட்டால் பின்னர் பவுண்டரிகளை எளிதாகக் கடந்து பெரிய ஸ்கோரை அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். அந்த சமயங்களில் ஸ்டிரைக்கை மாற்றுவது தேவையற்றதாகும். அதற்கேற்ற பயிற்சிகளை எடுத்தாலும் பந்து சரியான இடத்தில் இருந்தால் அதை சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை லட்சியமாகும்” என்று தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த இளம் கன்றாக பேசினார்.

Advertisement