இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் இருந்து கவுரவமாக வெளியேறியது. அதோடு அடுத்தாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 210 ரன்களையும், விராட் கோலி 113 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 410 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 34 ஓவர்களில் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 227 வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். இஷான் கிஷன் விளையாட சென்றதும் இவ்வளவு ரன்கள் குவிப்பார் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஆனால் தன்னுடைய வாய்ப்பை இரு கைகளாலும் அவர் பற்றி எடுத்துக் கொண்டார்.
இந்த போட்டியில் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விராட் கோலியும் அவரது அனுபவத்தை இந்த போட்டியின் மூலம் அவருக்கு வழங்கி மிகச் சிறப்பாக விளையாட வைத்தார். இந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே நாங்கள் வெற்றியை பெற்றோம். ஆனாலும் ஒரு அணியாக இந்த தொடரில் நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டோம்.
இதையும் படிங்க : மேலிடத்திலிருந்தே தப்பு பண்ண சொன்னாங்க, பந்து சேதப்படுத்தப்பட்ட சர்ச்சையில் டேவிட் வார்னர் மேனேஜர் அதிர்ச்சி தகவல்
இந்த தொடரை எங்களால் கைப்பற்ற முடியாமல் போனாலும் இந்த போட்டியில் கிடைத்த வெற்றியானது டெஸ்ட் தொடருக்கு முன்னர் எங்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளதாக ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.