மேலிடத்திலிருந்தே தப்பு பண்ண சொன்னாங்க, பந்து சேதப்படுத்தப்பட்ட சர்ச்சையில் டேவிட் வார்னர் மேனேஜர் சொன்ன தகவல்

warner
- Advertisement -

ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐசிசி உலக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக திகழ்கிறது என்றே கூறலாம். இருப்பினும் எந்த அளவுக்கு ஆஸ்திரேலியா வெற்றிகரமாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமாகும். குறிப்பாக ஏதேனும் முக்கிய தருணங்களில் எதிரணிய ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடும் அந்த அணி பலமுறை ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளது. அதனுடைய உச்சகட்டம் தான் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்காகும்.

ஆம் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக பந்தை தேய்ப்பதற்கு ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேண்கிராஃப்ட் உப்பு காகிதத்தை பயன்படுத்தியது கேமராமானின் சாதுரியத்தால் உலகிற்கு அம்பலமானது. அதற்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரும் உடந்தையாக இருந்தது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. அதனால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட ஒரு வருடம் அதிரடியான தடை விதிக்கப்பட்ட நிலையில் கேமரூன் பேன்கிராப்ட் 9 மாதங்கள் தடை செய்யப்பட்டார்.

- Advertisement -

அந்த சம்பவத்துக்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்த டேவிட் வார்னர் ஒரு வருடம் தடை பெற்றது மட்டுமல்லாமல் தனது வாழ்நாளில் மேற்கொண்டு கேப்டனாக செயல்படுவதற்கு ஆஸ்திரேலிய வாரியம் அதிரடி தடை விதித்தது. முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹோபார்ட் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 85 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. மேலும் அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் பப் டு பிளேஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில் அந்த தோல்விக்கு பழி வாங்கும் வகையிலேயே 2018 டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தி எப்படியாவது தென் ஆப்பிரிக்காவை மோசமாக தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வாரிய மேலிடத்தில் இருந்தே உத்தரவு வந்ததாக டேவிட் வார்னரின் மேனேஜர் ஜேம்ஸ் எர்ஸ்கின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் வசமாக சிக்கிய போது டேவிட் வார்னர் உள்ளிட்ட 3 வீரர்களை மாட்டி விட்டு அதற்கு ஊக்கத்தை கொடுத்த ஆஸ்திரேலிய வாரியத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தப்பித்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வார்னர் வாயை மூடிக்கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவையும் சக வீரர்களையும் பாதுகாத்தார். ஏனெனில் யாரும் அதைக் கேட்க விரும்பவில்லை. அதன்பின் அவர் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். ஆனால் தற்போது அவர் வில்லனாக உருவாக்கப்பட்டு விட்டார். இந்த வழக்கில் அந்த மூவரை தவிர்த்து இன்னும் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். 2 மூத்த ஆஸ்திரேலியா வாரிய நிர்வாகிகள் ஹோபார்ட்டில் இருக்கும் உடைமாற்றும் அறையில் இருந்தனர். அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்த மோசமான தோல்வியால் ஏமாற்றத்துடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் நாங்கள் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்திருக்க வேண்டும் என்று டேவிட் வார்னர் கூறினார்”

“அதற்கு அவர்கள் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய ஒரே வழி அதை சேதப்படுத்துவது தான் என்று கூறினார்கள். அவர்கள் தான் அதை செய்யச் சொன்னார்கள். இருப்பினும் பந்துகளை சேதப்படுத்துவது ஒரு நகைச்சுவை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது இப்போதும் காலம் கடந்து பேசப்படுகிறது. அது சரி என்று நான் பரிந்துரைக்கவில்லை ஏனென்றால் நீங்கள் பந்தை சேதப்படுத்த கூடாது என்று நான் நினைக்கவில்லை. மேலும் அந்த நிகழ்வு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் மக்களின் கண்ணோட்டத்திற்காக ஊதி பெரிதாக்கப்பட்டது. இருப்பினும் அந்த நிகழ்வு நல்லதல்ல என்று நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்”

இதையும் படிங்க: வீடியோ : சதமடித்த பின் மங்காத்தா தல அஜித் ஸ்டைலில் தமக்கு தாமே வெறியேற்றும் அந்த வார்த்தைகளை பேசிய கிங் கோலி

“ஆனால் அது எல்லோரையும் விட 3 பேரை மட்டும் முற்றிலுமாக பாதித்து விட்டது. அது நியாயமற்றது” என்று கூறினார். முன்னதாக ஒருநாள் போட்டிகளில் டேவிட் வார்னர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பட் கமின்ஸை புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்தது. அதனால் அதிருப்தியடைந்த வார்னர் நான் கிரிமினல் இல்லை என்று பேசியிருந்த நிலையில் அவருடைய மேனேஜரின் இந்த கருத்து மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

Advertisement