நீங்க 600 ரன்ஸ் அடிக்கிற ஆளா? ஜெய்ஸ்வால் பற்றி பேச உரிமையில்ல.. டக்கெட்டை விளாசிய மைக்கேல் வாகன்

Micheal Vaughan 4
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பேக் கொடுத்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனையும் படைத்தது.

மறுபுறம் இந்தியாவை 12 வருடங்கள் கழித்து அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது. முன்னதாக 2வது போட்டியில் 399 ரன்களை இலக்காக நிர்ணயித்த போது 600 ரன்களாக இருந்தாலும் அதை அடித்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.

- Advertisement -

இப்படியே போனால்:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தங்களுடைய அணுகுமுறையை பார்த்து தான் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் விளையாடுவதாக பென் டக்கெட் 3வது போட்டியின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆண்டர்சன், டக்கெட் கருத்துக்களை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கடைசி 2 போட்டியிலாவது சரியாக விளையாடி வெல்லுமாறு எச்சரித்துள்ளார். இது பற்றி டெலிகிராஃப் இணையத்தில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு.

“அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டால் எதுவும் தவறில்லை என்று நினைப்பீர்கள். விசாகப்பட்டினத்தில் 600 ரன்களாக இருந்தாலும் அதை சேசிங் செய்வோம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறினார். இந்த வாரம் பென் டக்கெட் 557 ரன்களை விட இன்னும் சிறந்த இலக்கை எதிர்பார்ப்பதாக கூறினார். ஆனால் அவர்கள் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்கள். வரலாற்றில் வேறு எந்த வீரருமே அட்டாக் செய்யும் பேட்டிங்கை வெளிப்படுத்தாதது போல் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்கான பெருமைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்றும் பென் டக்கெட் கருதுகிறார்”

- Advertisement -

“இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ரா என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது பற்றி பேசுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்த வரை இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்யும் அவமரியாதையாகும். குறிப்பாக ஜோ ரூட் அடித்த ஷாட் இங்கிலாந்து ஒரு வளையத்திற்குள் சிக்கியுள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டாகும். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து தங்களுடைய வழியை வளைத்துள்ளது”

இதையும் படிங்க: அண்டர்சனின் 24 வருஷ கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக எந்தவொரு வீரரையும் நிகழ்த்தாத சாதனையை செய்த – ஜெய்ஸ்வால்

“அதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை தங்களுடைய கையில் எடுத்து அவர்கள் விளையாடுவது உற்சாகமாக இருக்கிறது. ஆனால் இறுதியில் அவர்கள் இப்போதை விட சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில் நியூசிலாந்தில் வெல்லாத அவர்கள் ஆஷஸ் தொடரையும் வெல்லவில்லை. இப்படியே தொடர்ந்தால் இந்தியாவிலும் அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள். ஒரு அணியாக உங்களுடைய செயல்பாடுகள் தொடர் வெற்றிகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement