அண்டர்சனின் 24 வருஷ கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக எந்தவொரு வீரரையும் நிகழ்த்தாத சாதனையை செய்த – ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸின் போது 10 ரன்கள் மட்டுமே எடுத்த ஆட்டமிழந்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது 236 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் என 214 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை இரண்டாவது இன்னிங்சின் போது சரமாரியாக அடித்த ஜெய்ஸ்வால் ஆண்டவரசனுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றிலும் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் செய்த சாதனை குறித்து குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : ஜேம்ஸ் ஆண்டர்சனின் 24 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரருமே அவருக்கு எதிராக மூன்று சிக்ஸர்களை தொடர்ச்சியாக அடித்தது கிடையாது.

இதுதான் முதல் முறையாக ஆண்டர்சனை எதிர்த்து ஒரு வீரர் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை அடிப்பது என யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சாதனையை நேரலையில் பகிர்ந்து கொண்டார். அதேபோன்று அவரது சாதனை குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் :

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் வீரராக ஆண்டர்சனை எதிர்த்து மூன்று சிக்ஸர்களை அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் அடித்து அவருடைய வெறித்தனத்தை காண்பித்துள்ளார் என்று பாராட்டி இருந்தார். தற்போது 22 வயதாகும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள வேளையில் இரண்டு இரட்டை சதங்களை அடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : அறிமுக போட்டியில் அதிரடி.. வரலாற்றில் 4வது இந்திய வீரராக சர்பராஸ் கான் படைத்த ஸ்பெஷல் சாதனை

ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடியுள்ள அவருக்கு விரைவில் ஒருநாள் அணியிலும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement