அறிமுக போட்டியில் அதிரடி.. வரலாற்றில் 4வது இந்திய வீரராக சர்பராஸ் கான் படைத்த ஸ்பெஷல் சாதனை

Sarfaraz Khan 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

மும்பையைச் சேர்ந்த அவர் கடந்த சில வருடங்களாக ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்துப் போராடி வந்தார். இருப்பினும் புஜாரா போன்ற சீனியர்கள் இருந்ததால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த அவருக்கு தற்போது விராட் கோலி, ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாததால் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஸ்பெஷல் சாதனை:
அந்த முதல் வாய்ப்பிலேயே அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து 9 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட அவர் 62 ரன்கள் குவித்து சதமடிப்பதற்கு தயாரான போது துரதிஷ்டவசமாக ஜடேஜாவால் ரன் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்ற அவர் மீண்டும் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 3 சிக்சருடன் 68* ரன்கள் குவித்து இந்தியா 430/4 ரன்கள் அடிப்பதில் தன்னுடைய பங்காற்றினார். அந்த வகையில் தன்னுடைய அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் அசத்திய சர்பராஸ் கான் 2 அரை சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் அறிமுக போட்டியின் 2 இன்னிங்ஸிலும் அரை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சர்பராஸ் கான் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. திலவர் ஹுசைன் – இங்கிலாந்துக்கு எதிராக, 1934
2. சுனில் கவாஸ்கர் – வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 1971
3. ஸ்ரேயாஸ் ஐயர் – நியூசிலாந்துக்கு எதிராக, 2021
4. சர்பராஸ் கான் – இங்கிலாந்துக்கு எதிராக, 2024*

இதையும் படிங்க: 250 – 250 விக்கெட்ஸ்.. அர்ப்பணிப்புடன் விளையாடிய அஸ்வின்.. முரளிதரனுக்கு நிகராக.. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை

மொத்தத்தில் கடினமாக போராடி இந்திய அணிக்குள் நுழைந்துள்ள அவர் தன்னுடைய முதல் வாய்ப்பையே பொன்னாக மாற்றி கேரியரை சாதனையுடன் துவங்கியுள்ளார். எனவே விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் வந்தாலும் வருங்காலங்களில் அவருக்கு ஏதேனும் ஒரு தொடரில் தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement