இப்போதைக்கு பர்பெக்ட் டி20 பிளேயர் என்றால் அது இவர்தான் – இந்திய வீரரை பாராட்டிய மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில தினங்களில் ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Cup

- Advertisement -

சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தற்போதைய கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் அவர் தான் மிகவும் பர்பெக் வீரர் என்று கூறுவேன். அவர் பேட்டிங், பவுலிங் மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் 100 சதவீத ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறார். சென்னை அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணமாகும் அவர் திகழ்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜடேஜாவை நான் ஏன் இவ்வளவு உயர்த்தி பேசுகிறேன் என்றால் அவருடைய பேட்டிங் தற்போது வேறு லெவலில் உள்ளதை நாம் பார்த்து வருகிறோம். அவரிடம் கிறிஸ் கெய்லுக்கு உண்டான பவரும், விராத் கோலியை போன்ற திறனும் உள்ளது. அதனால் தான் அவரால் ஐபிஎல் தொடரில் பந்துகளை எளிதாக விளாச முடிகிறது என்று கூறினார். அதுமட்டுமின்றி ஜடேஜா மிக சிறப்பான ஒரு பீல்டர்.

அதோடு அவருடைய பந்து வீச்சிலும் நல்ல தாக்கம் இருப்பதால் அவரால் விக்கெட்டுகளையும் எடுக்க முடிகிறது. பேட்டிங்கில் 15 பந்துகள் வரை நின்றால் பெரிய ரன் குவிப்பில் அவர் ஈடுபடுகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் இறுதி நேரத்தில் களமிறங்கும் ஜடேஜா சரமாரியாக ரன்களை அடித்து வருகிறார் என்று மைக்கில் வாகன் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்திய அணிக்கு சிக்கலாக மாறியுள்ள 4 பிரச்சனைகள் – விவரம் ஈதோ

அவர் கூறியது போலவே ஜடேஜா இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரின் 20-ஆவது ஓவர்களில் 19 பந்துகளை சந்தித்து 64 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 10 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் 212 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 152.51 என்ற அளவில் உள்ளது. அது மட்டுமின்றி அவர் பவுலிங்கில் ஓவருக்கு 7 ரன்களை விட குறைவாக வழங்கி அவர் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement