- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் இவர்தான் – மைக்கல் கிளார்க் கணிப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது நாளை மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கும் வேளையில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தயிலும் எழுந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகன் யார்? : மைக்கல் கிளார்க் கணிப்பு

இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படப்போகும் வீரர் யார்? இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வெல்லப்போவது யார்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க்கும் இந்த இறுதி போட்டி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒரு பந்துவீச்சாளரிடம் பல்வேறு திறமைகள் இருக்கலாம். ஆனால் போட்டியின் அழுத்தமான நிலையிலும் நிதானமாக செயல்பட்டு ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை பும்ராவிடம் அதிகமாக உள்ளது. அவரை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாற்றுவதே அவரது துல்லியமான பந்துவீச்சு தான்.

எந்த ஒரு போட்டியிலும் அழுத்தமான வேளையிலும் அவர் நிதானத்தை இழக்காமல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியபோதும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இங்கிலாந்து அணியை பும்ரா வீழ்த்தி காட்டியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கங்குலி மட்டும் இல்லனா நீங்க எல்லாம் ஒரே ஆளே கிடையாது.. முகமது கைப்பை சீண்டிய – முகமது ஆமீர்

எனவே இறுதிப் போட்டியிலும் அவர் ஆட்டநாயகன் விருதினை வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அந்த அளவிற்கு பும்ராவின் பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. தற்போதைய நவீன கிரிக்கெட் உலகின் மூன்று வகையான போட்டிகளிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -