பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் சமீப காலமாகவே இந்திய அணி குறித்தும், இந்திய வீரர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாட மாட்டார் என்றும் அவர் ஒரு காட்டடி அடிக்கும் வீரரே தவிர முறைப்படி விளையாட தெரியாது என்றும் விமர்சித்திருந்தார்.
முகமது கைப்பை சீண்டிய முகமது ஆமீர் :
அதோடு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லாது என்றும் சாம்பியன் பட்டத்தை ஜெயிக்காது என்றும் பல்வேறு காரசாரமான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார். ஆனால் அவரது கருத்திற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
இவ்வேளையில் முகமது அமீர் இந்தியாவை பற்றி பேசுவதெல்லாம் தனது சுய விளம்பரத்திற்காக மட்டுமே தான் பேசுகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் அவரை விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அவரது விமர்சனத்திற்கு பதில் கொடுத்துள்ள முஹமது அமீர் கூறுகையில் :
முகமது கைப் எவ்வளவு கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்? என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் 350-க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். என்னுடைய புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் அவரைவிட நான் பெரிய வீரர் என்பது தெரியும். எனவே நான் பிரபலமாக இந்தியாவை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது முகமது அமீர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா கிட்ட மட்டும் நீங்க ஜெயிக்கல.. நான் உங்களை இப்படிதான் கூப்பிடுவேன் – டேல் ஸ்டெயின் பேச்சு
மேலும் முகமது கைஃப் பீல்டிங் செய்வதற்காக மட்டும்தான் இந்திய அணியில் இருந்தார். அதிலும் குறிப்பாக முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மட்டும் இல்லை என்றால் அவரெல்லாம் இந்திய அணியில் இருந்திருக்கவே முடியாது. ஆனால் நான் என்னுடைய சிறப்பான பந்துவீச்சு காரணமாக இன்று வரை கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என முகமது ஆமீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



