நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 8-ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணி குறித்து பேசிய : டேல் ஸ்டெயின்
ஏற்கனவே நடப்பு சாம்பியனாக இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதேவேளையில் மறுபுறம் நியூசிலாந்து அணி தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களும் இந்திய அணிக்கு சவாலை அளித்து கோப்பை வெல்ல காத்திருக்கிறார்கள்.
இதனால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் :
நியூசிலாந்து மட்டும் இந்த இறுதி போட்டியில் வெல்லவில்லை என்றால் அவர்களை நான் சோக்கர்ஸ் என்று தான் அழைக்கப்போகிறேன் என்று சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நியூசிலாந்து அணி என்னை தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் இந்த உலக கோப்பை வெல்லுங்கள் இல்லையெனில் நான் உங்களை சோக்கர்ஸ் என்று தான் அழைப்பேன்.
இதையும் படிங்க : இப்படி விளையாடுறதால் தான் உங்களுக்கு மரியாதை கிடைக்குது.. பும்ராவை பாராட்டிய – கபில் தேவ்
ஏனெனில் எங்களது அணியை விட நீங்கள் தான் ஐசிசி போட்டியில் அதிகமுறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். எனவே இம்முறையும் நீங்கள் இந்திய அணியால் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் உங்களை சோக்கர்ஸ் என்று தான் அழைப்பேன் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.



