இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குறித்தது.
ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய : கபில் தேவ்
பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது கடைசி கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா இங்கிலாந்து அணியிடமிருந்து வெற்றியை பறித்து இந்திய அணிக்கு பரிசாக வழங்கியிருந்தார்.
இந்த போட்டி முடிந்த கையோடு பும்ராவை பாராட்டி பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவும் ஜஸ்ப்ரீத் பும்ராவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இது உண்மையிலேயே நல்ல கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
நான் ஜஸ்ப்ரீத் பும்ராவை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக கருதுகிறேன். ஏனெனில் போட்டியின் அழுத்தமான வேலைகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவது அவருக்கு மரியாதையை பெற்று தருகிறது. சஞ்சு சாம்சன் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் என்பது ஒரு தனிநபர் ஆட்டம் கிடையாது. ஒரு அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும் போது வெற்றியை ருசிப்பார்கள்.
இதையும் படிங்க : ப்ளீஸ் இந்தவொரு நாள் பும்ராவுக்கு மோசமான நாளாக அமையனும்.. வேண்டுகோளை முன்வைத்த – நியூசி வீரர்
அந்த வகையில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளனர். 250 ரன்கள் மேற்பட்டு அடிக்கப்பட்ட இந்த போட்டி இறுதி வரை விறுவிறுப்பாக சென்றது பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி எனக் கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



