
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் விளையாடும் இந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் வென்ற இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய அவர் தற்போது சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார் என்று கிளார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக வருவார் என்றும் கணிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்நாயகன் விருதை வெல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும் என்று நான் சொல்வேன். ஃபார்முக்கு வந்துள்ள அவர்களுடைய கேப்டன் ரோகித் சர்மாவுடன் நான் செல்கிறேன்”
“இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக ரோஹித் சர்மா இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் மீண்டும் ரன்கள் குவிப்பதை நான் பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்தியா தங்களுடைய வெற்றிக்கு அவர் தேவைப்படுகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் அதிக விக்கெட்டுகள் எடுக்கக் கூடிய வீரராக வருவதை நான் விரும்புகிறேன்”
“இங்கிலாந்தை பற்றி எனக்கு தெரியும். தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர் சூப்பர்ஸ்டார் அவர் இந்தத் தொடரில் கடினமாக விளையாடப் போகிறார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தொடரில் இத்தொடரில் என்னுடைய அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரராக இருப்பார். அதே போல டிராவிஸ் ஹெட் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்”
இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ஆஸியை வீழ்த்தி.. இந்தியா அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பாங்க.. மைக்கேல் கிளார்க்
“ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் கடந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்காக அசத்தினார். சமீபத்திய இலங்கை தொடரில் கொஞ்சம் தடுமாறிய அவர் மீண்டும் அசத்துவார். எனவே அவர் ஃபைனலில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தாலும் அவர் இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதை வெல்வார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.