2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ஆஸியை வீழ்த்தி.. இந்தியா அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பாங்க.. மைக்கேல் கிளார்க்

Micheal Clarke
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் வென்ற இந்தியா இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். அது 2023 உலகக் கோப்பை ஃபைனலுக்கு மறு ஆட்டம் போல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லும்:

இம்முறை வென்று 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் கிளார்க் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்கும் என்று நான் சொல்வேன்”

“அவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஃபைனலில் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அது 2023 உலகக்கோப்பை ஃபைனல் மறு ஆட்டம் போல் இருக்கலாம். அதைத்தான் நானும் நம்புகிறேன். உங்களுக்கு தெரியுமா அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் என்னுடைய வாயில் இருந்து வந்ததை என்னால் நம்ப முடியவில்லை”

- Advertisement -

கிளார்க் கணிப்பு:

“ஆனால் இந்தத் தொடரை இந்தியா வெல்லும் என்று நான் நினைக்கிறேன். இத்தொடரில் அவர்களுக்கு ஆதரவாகவும் நான் செல்கிறேன்” என்று கூறினார். முன்னதாக ஐசிசி கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் அதற்கு முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என தற்போதைய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடந்த காலங்களில் பலமுறை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவரை தவிர தரமான பிளேயர் இல்ல.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஓவர்ரேட்டட் எதிரி மட்டுமே.. ஹர்பஜன் வெளிப்படை

ஏனெனில் 2003 முதல் 2023 உலகக்கோப்பை வரை இந்தியாவை பலமுறை ஆஸ்திரேலியா தோற்கடித்துள்ளது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியை 2 முறை வென்ற அணி என்று ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. எனவே சமமான திறமையை கொண்டுள்ள இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2023 தோல்விக்கு பதிலடி கொடுத்தால் அது இங்குள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement