மகளிர் ஐபிஎல் 2023 : முதல் போட்டியிலேயே மும்பை முரட்டு வெற்றி, ரசிகர்கள் அறியாத புதிய விதியை பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத்

- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லப்போகும் மகளிர் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் ஐபிஎல் தொடருக்கு நிகராக 5 அணிகள் பங்கேற்கும் பெரிய தொடராக நடைபெறுகிறது. பல வெளிநாட்டு நட்சத்திர வீராங்கனைகள் விளையாடும் இத்தொடர் மார்ச் 4ஆம் தேதியன்று பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் மும்பையில் கோலாகலமாக துவங்கியது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு யஸ்டிக்கா பாட்டியா 1 (8) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த நட் ஸ்கீவர் 5 பவுண்டரியுடன் 23 (18) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீராங்கனை ஹேய்லே மேத்யூஸ் தனது பங்கிற்கு அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்சருடன் 47 (31) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அவர்களை விட அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் களமிறங்கியது முதலே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டலாக பேட்டிங் செய்தார். மொத்தம் 14 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 65 (30) ரன்கள் குவித்து அவுட்டானாலும் நியூசிலாந்து வீராங்கனை அமிலியா கேர் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45* (24) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

முரட்டு வெற்றி:
கூடவே பூஜா வஸ்திரக்கர் 15 (8) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் மும்பை 207/5 ரன்கள் எடுத்தது. சுமாராக செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 208 என்ற மெகா இலக்கை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் பெத் மூனி ஆரம்பத்திலேயே காயமடைந்து வெளியேறிய நிலையில் மேக்னா 2, ஹர்லீன் தியோல் 0, கார்ட்னர் 0 என முக்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கை விட்டனர். அதனால் 15.1 ஓவர்களில் 64 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ஹேமலதா 29* (23) ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சைகா இசாய்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 143 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மும்பை மகளிர் ஐபிஎல் தொடருக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்துள்ளதால் முதல் கோப்பை தங்களுக்கே என்று அந்த அணி ரசிகர்கள் மாஸ் காட்டுகிறார்கள். முன்னதாக இந்த தொடரில் ரசிகர்களை கவர்வதற்காக இளம் பெண் குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் போன்ற நிறைய சலுகைகளை செய்துள்ள பிசிசிஐ சில புதிய விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அவுட், கேட்ச் போன்றவைகளுக்கு மட்டுமே நடுவர் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து டிஆர்எஸ் எடுக்கும் முறை இருப்பதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

ஆனால் மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒய்ட் மற்றும் நோ-பால் உட்பட களத்தில் நடுவர் கொடுக்கும் எந்த திருப்தியளிக்காத முடிவையும் மறுபரிசீலனை செய்யலாம் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் குஜராத் பேட்டிங் செய்த போது சைக்கா இசாய்க் வீசிய 13ஆவது ஓவரின் ஒரு பந்தை ஒய்ட் போல வீசினார். அதை அடிக்க முயற்சித்த குஜராத் வீராங்கனை மோனிகா பட்டேல் தவற விட்டதால் நடுவர் வழக்கம் போல ஒயிட் கொடுத்தார். இருப்பினும் அந்த பந்து மோனிகா பட்டேல் பேட்டில் பட்டதாக மும்பை விக்கெட் கீப்பர் யாஸ்டிகா பாட்டியா உறுதியாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ரிவியூ எடுத்த போது ரிப்ளையில் பந்து மோனிகா பட்டேல் கை உறைகளில் பட்டது தெரிந்தது. அதனால் தாம் கொடுத்த ஒய்டை நடுவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க: IND vs AUS : 4 ஆவது போட்டியிலும் உங்களுக்கு இதே நிலைமைதான் வரும். இந்திய அணியை எச்சரித்த – ஸ்டீவ் ஸ்மித்

இதற்கு முன் இது போல ஒய்ட்க்கு ரிவியூ எடுத்து பார்க்காத ரசிகர்கள் இந்த புதிய விதிமுறையை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை வெற்றிகரமாக எடுத்ததை பார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதே போல நோ-பாலுக்கும் ரிவியூ எடுக்க இந்த விதிமுறை வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement