IND vs AUS : 4 ஆவது போட்டியிலும் உங்களுக்கு இதே நிலைமைதான் வரும். இந்திய அணியை எச்சரித்த – ஸ்டீவ் ஸ்மித்

IND vs AUS Siraj SMith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் பலமாக தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது.

IND vs AUS

- Advertisement -

அதன்பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெறாத வேளையில் ஸ்டீல் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்துள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த இந்தூர் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே 200 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது இந்திய அணியின் மோசமான ஆட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகவும் என்கிற வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கடைசி போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு எதிராக சவால் விடுக்கும் வகையில் ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அதன்படி மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு விடயங்களை பேசிய ஸ்மித் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது போலவே கடைசி போட்டியிலும் நடக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் இங்கு உள்ள மைதானங்களின் தன்மையை கணக்கில் கொண்டே இந்த மூன்றாவது போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம்.

இதையும் படிங்க : IND vs AUS : அவர மாதிரி க்ளாஸ் பிளேயர் இவ்ளோ காலமா தடுமாறுவதை நம்ப முடியல – இந்திய வீரர் மீது மார்க் வாக் ஏமாற்றம்

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட இருப்பது உண்மையிலேயே எங்களுக்கு பெருமையாக உள்ளது. நிச்சயம் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முயற்சிப்போம் என்று இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement