IND vs AUS : அவர மாதிரி க்ளாஸ் பிளேயர் இவ்ளோ காலமா தடுமாறுவதை நம்ப முடியல – இந்திய வீரர் மீது மார்க் வாக் ஏமாற்றம்

Mark Waugh
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்த இந்தியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த கடுமையான விமர்சனங்களை 2022 ஆசியக் கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பினார்.

Virat Kohli

- Advertisement -

அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்ட அவர் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பினார். அதனால் கடந்த 2019 அக்டோபர் மாதம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசியாக சதமடித்திருந்த அவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடிப்பார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஏமாற்றத்தை கொடுத்த அவர் இந்த தொடரிலும் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

மார்க் வாக் ஏமாற்றம்:
குறிப்பாக கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த சதத்துக்கு பின் 41 இன்னிங்ஸில் 1195 நாட்களாக சதமடிக்காமல் இருந்து வரும் அவர் 25.70 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். கடைசியாக கடந்த 2022 ஜனவரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரை சதமடித்திருந்த போது 55 என இருந்த அவருடைய கேரியர் பேட்டிங் சராசரி தற்போது 48.12 என்ற பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போன்ற கிளாஸ் நிறைந்த வீரர் இவ்வளவு நாட்களாக சதமடிக்காமல் தடுமாறுவது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் கூறியுள்ளார்.

kohli 1

இருப்பினும் இந்தத் தொடரில் ஓரிரு இன்னிங்ஸில் நல்ல தொடக்கத்தை பெற்று அவுட்டான அவர் விரைவில் சதமடிப்பதை பார்க்க விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவரைப் போன்ற கிளாஸ் நிறைந்த வீரர் இவ்வளவு நாட்களாக சதமடிக்காமல் இருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இருப்பினும் சமீபத்தில் நல்ல ஃபார்மை காட்டிய அவர் ஒருநாள் தொடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்தார். இருப்பினும் அதை டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அவர் காட்டவில்லை என்பது எனக்கு தெரியும்”

- Advertisement -

“கடந்த 3 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் சிறப்பாக விளையாடியதற்கான அறிகுறிகள் தெரிந்தது. பந்தை பார்த்து சிறப்பாக நடு பேட்டில் எதிர்கொள்ளும் அவருடைய டிஃபன்ஸ் வலுவாக உள்ளது. இருப்பினும் ஓரிரு சிறிய தவறுகள் செய்வது அவருக்கு பெரிய பாதகத்தை கொடுக்கிறது. போதாகுறைக்கு அவருக்கு நிறைய அதிர்ஷ்டமும் இல்லை. அதனால் ஒரு தவறு செய்தாலும் அவர் அவுட்டாகி விடுகிறார். எனவே உலகத்தரம் வாய்ந்த வீரரான அவருக்கு மிக விரைவில் சதம் காத்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். தற்போதைக்கு அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”

Mark-Waugh

“மேலும் அவர் சற்று கடினமான கைகளுடன் விளையாடுவதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் ஸ்கொயர் பகுதிக்கு பதில் அவர் மிட் ஆன் திசையில் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அத்துடன் இந்தியாவில் முன்னங்காலில் அவர் விளையாட முயற்சிப்பது டெக்னிக்கல் அளவில் சிறப்பானதல்ல”

இதையும் படிங்க:IND vs AUS : சச்சின், காலீஸ், லாரா கூட அவுட்டாகிடுவாங்க – இந்தூர் பிட்ச்சை சரமாரியாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்

“சில இன்னிங்ஸ்களில் அவர் வெள்ளை கோட்டுக்கு உள்ளே விளையாடியது மெதுவான பிட்ச்களில் அவருக்கு பொருந்தியது. மொத்தத்தில் அவரிடம் வீக்னெஸ் இல்லை என்றாலும் ஒரு சிறிய தவறு செய்யும் போது அவுட்டாகி விடுகிறார்” என்று கூறினார்.

Advertisement