IPL 2023 :வழக்கம்போலவே முதல் போட்டியில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் – என்ன நடந்தது?

Rohit-Sharma
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் முதலில் பெங்களூர் அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.

Kohli

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 46 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 84 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன் பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது துவக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Faf

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 82 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை அணி தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த வேளையில் இந்த போட்டியிலும் அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறையும் முதல் போட்டியில் தோல்வியை பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : RCB vs MI : போராடிய திலக் வர்மா, தடவிய மும்பையை தாறுமாறாக அடித்து சாதனையுடன் சாய்த்த விராட் – டு பிளேஸிஸ்

அதுமட்டுமின்றி பேட்டிங்கில் துவக்கத்திலேயே அடுத்தடுத்து நான்கு விக்கெடுகளை இழந்து சரிவை சந்தித்து இருந்தாலும் திலக் வர்மாவின் அபாரமான பேட்டிங் காரணமாக ஓரளவு டீசன்டான ஸ்கோரை எட்டியும் மும்பை அணியின் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாட்டினால் இந்த தோல்வி கிடைத்துள்ளது என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement