- Advertisement -
ஐ.பி.எல்

வைபவ் சூர்யவன்ஷியை தட்டித்தூக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 11 ஓவராக குறைக்கப்பட்டபோது துவக்க வீரராக களமிறங்கிய அவர் 15 பந்துகளில் 39 ரன்களை குவித்து அசத்தினார்.

வைபவ் சூர்யவன்ஷியை தூக்கும் மும்பை இந்தியன்ஸ் :

எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் அதிரடியாக விளையாடும் அவர் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவை முதல் முறையாக எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்சி அவரது பந்துவீச்சை எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பும்ராவை சிக்ஸருக்கு விரட்டி வியக்க வைத்தார்.

- Advertisement -

அதோடு அதே ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் அடித்து தான் இப்படித்தான் விளையாடப்போகிறேன் என்பதையும் அவர் வெளிகாட்டியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை அந்தப் போட்டி முடிந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹார்திக் பாண்டியாவும் பாராட்டி இருந்தார். இந்நிலையில் தற்போது 15 வயதாகும் வைபவ் சூர்யவன்சி அனைத்து போட்டிகளிலும் அசத்தி வரும் வேளையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வைபவ் சூர்யவன்சியை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அணிக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர்களை தங்களது அணிக்குள் கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் பல்வேறு வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியால் பெரிய தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்டு வரும் வேளையில் வைபவ் சூர்யவன்ஷியையும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையிலோ அல்லது பெரிய தொகை கொடுத்தோ விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஓவர் தான் பவர்பிளே.. அதுல என்னோட பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் என்கிற தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஏலத்திற்கு சென்றால் அவரது மதிப்பு குறைந்தது 20 கோடியை தொடும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -