3 ஓவர் தான் பவர்பிளே.. அதுல என்னோட பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் விளையாடுகையில் 11 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

இதுதான் என்னோட பிளான் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

11 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே குவிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் 32 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 77 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது அதிரடியான ஆட்டம் காரணமாகவே ராஜஸ்தான் அணி 150 ரன்களை நோக்கி சென்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில் : இந்த போட்டியில் முதல் மூன்று ஓவர்கள் மட்டுமே பவர்பிளே என்பதனால் நான் எந்த ஓவரை அட்டாக் செய்து விளையாடலாம் என்று யோசித்தேன். அந்த நேரத்தில் முதல் ஓவரை வீச தீபக் சாகர் பாய் வந்ததும் நான் அவரை அடித்து விளையாட வேண்டும் என்று நினைத்து அந்த ஓவரை அட்டாக் செய்தேன்.

அதேபோன்று அடுத்த ஓவரில் பும்ரா வந்ததும் வைபவ் சூரியவன்ஷி பார்த்துக் கொள்வார் என்றும் நினைத்தேன். அந்த வகையிலே எங்களால் மிகச் சிறப்பாகவும் துவக்க ஓவர்களில் விளையாட முடிந்தது. இந்த போட்டியில் நான் எல்லா ஷாட்டுகளையும் விளையாட முயற்சித்தேன். மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஏற்றவாறு தயாராவது எளிதானது கிடையாது. இருந்தாலும் அதற்காக நாம் தயாராகும்போது நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. வெற்றி பின்னர் – ரியான் பராக் பேட்டி

இந்த போட்டியை பொறுத்தவரை சூழலுக்கு ஏற்றவாறு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து விளையாடினேன். மற்ற வீரர்களும் அதேபோன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்த முடிந்தது என ஆட்டநாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement