கடைசி நேரத்தில் வெளியேறிய ஜேசன் பெரன்ஃடார்ப்.. உடனடியாக அதிரடி இங்கிலாந்து பவுலரை வாங்கிய மும்பை

jason behrendorff
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வெல்வதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழும் ரோஹித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அதிரடியாக கழற்றி விட்ட மும்பை ஹர்டிக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கி புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

இருப்பினும் அதற்கு ஒரு தரப்பு தெரிவித்த எதிர்ப்பை தாண்டி மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதற்காக ஹர்திக் பாண்டியா தயாராகி வருகிறார். இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரன்ஃடார்ப் தற்போது காயமடைந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மாற்று வீரர்:
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் லுக் வுட் மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022இல் இங்கிலாந்துக்காக அறிமுகமான அவர் இதுவரை 5 டி20 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் 135 – 145 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி அசத்தக்கூடிய அவர் வங்கதேசத்தில் நடைபெற்ற பிபிஎல் தொடரில் சைலட் அணி ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் தொடரிலும் அசத்தினார். அதன் காரணமாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறிய ஜேசன் பெரன்ஃடார்ப்க்கு பதிலாக அவரை மும்பை அணி நிர்வாகம் உடனடியாக 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளது.

- Advertisement -

முன்னதாக மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர் நுவான் துஷாராவும் சமீபத்திய வங்கதேச தொடரில் காயமடைந்தார். ஆனால் அவருக்கான மாற்று வீரர் பற்றிய அறிவிப்பு வெளியிடாத மும்பை ஜேசன் பெரன்ஃடார்ப்க்கு பதிலாக மட்டும் லுக் வுட்டை வாங்கியுள்ளது. அத்துடன் ஏற்கனவே மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் காயத்தால் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அதுக்கு நன்றியுடையவனா இருக்கேன்.. தோனியை பாத்தா அடிக்கனும்ன்னு தோணும் ஆனா.. டு பிளேஸிஸ் நெகிழ்ச்சி பேட்டி

டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னும் பெங்களூருவில் உள்ள என்சிஏவில் இருக்கிறார். எனவே சூரியகுமார் எப்போது விளையாடுவார் என்பது என்சிஏ கொடுக்கும் அறிக்கையை பொறுத்து அமையும் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் புவுச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement