அதுக்கு நன்றியுடையவனா இருக்கேன்.. தோனியை பாத்தா அடிக்கனும்ன்னு தோணும் ஆனா.. டு பிளேஸிஸ் நெகிழ்ச்சி பேட்டி

Faf Du Plessis
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. குறிப்பாக அதில் நவீன கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் வீரர்களாக போற்றப்படும் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் எதிரணிகளில் விளையாட உள்ளனர்.

அதனால் அந்த போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய 2 நட்சத்திர வீரர்கள் இருப்பதாலேயே சென்னையில் சிஎஸ்கே அணியும் பெங்களூருவில் ஆர்சிபி அணியும் பிரபலமாக இருப்பதாக கேப்டன் டு ஃபிளேசிஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அண்ணன் மாதிரி:
அத்துடன் தம்முடைய கேரியரில் சென்னை அணியில் இருந்த காலங்கள் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் முன்னேறுவதற்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். அதை விட தோனி தமக்கு பெரிய அண்ணன் போன்றவர் என்பதால் அவரை அடிக்க நினைத்தால் கூட தம்மால் அடிக்க முடியாது என்றும் டு பிளேசிஸ் மிகுந்த அன்பு கலந்த நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“எம்எஸ் தோனி வரலாற்றின் மகத்தான கேப்டன். அவருடன் நீண்ட வருடங்கள் இருந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சிஎஸ்கே அணியில் இருந்தது என்னுடைய கேரியரில் முக்கியமான நேரங்கள் என்று நினைக்கிறேன். அந்த அணியில் இருந்து தோனி மற்றும் பிளேமிங்கை பார்த்து நான் கற்றுக் கொண்டது கேப்டனாக முன்னேறுவதற்கு என்னை வடிவமைத்தது. ஒரு இளம் கேப்டனாக அது என்னுடைய வளர்ச்சிக்கு ஸ்பெஷலாக அமைந்தது”

- Advertisement -

“எனவே அதற்காக நான் தோனிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். தோனியை பார்க்கும் போது பெரிய அண்ணன் போன்ற உணர்வை கொடுக்கும். நீங்கள் அவரை அடிக்க விரும்புவீர்கள். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் அங்கே தான் நிறைய மரியாதை இருக்கும். ஆனால் களத்திற்கு செல்லும் போது கண்டிப்பாக எங்களிடையே மகத்தான போட்டி இருக்கும்”

இதையும் படிங்க: நல்லவர்கள் போல் நடித்து.. மீண்டும் வன்மத்துடன் கலாய்த்த வங்கதேச வீரர்கள்.. கோபத்தில் இலங்கை ரசிகர்கள்

“சென்னை – ஆர்சிபி போட்டி பெரியது. அந்த போட்டியில் 2 – 3 இந்தியாவின் பெரிய நட்சத்திரங்கள் இருப்பார்கள். குறிப்பாக சென்னையில் சிஎஸ்கே அணி விரும்பப்படுவதற்கு எம்எஸ் தோனி காரணம் என்று நினைக்கிறேன். அதே போல ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதற்கு விராட் கோலி முக்கியமானவர். எனவே அந்த 2 நட்சத்திர வீரர்களுடன் விளையாடுவதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. அதனால் நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement