நல்லவர்கள் போல் நடித்து.. மீண்டும் வன்மத்துடன் கலாய்த்த வங்கதேச வீரர்கள்.. கோபத்தில் இலங்கை ரசிகர்கள்

Mushfiqur Raheem
- Advertisement -

இலங்கைக்கு எதிராக மார்ச் 18வது தேதி நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் அத்தொடரின் கோப்பையையும் வங்கதேசம் வென்றது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற தோல்வியை கொடுத்த இலங்கைக்கு இத்தொடரை வென்று வங்கதேசம் தக்க பதிலடி கொடுத்தது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய வந்த பின் தன்னுடைய ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார். அதனால் அதை மாற்றிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே அவர் காலதாமதம் செய்வதாக வங்கதேச அணியினர் புகார் செய்து விக்கெட்டை கேட்டு வாங்கினர்.

- Advertisement -

நல்லவர்கள் போல்:
அதனால் உலகிலேயே டைம்ட் அவுட் முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனையை மேத்யூஸ் படைத்தார். அந்த சூழ்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கையின் முதல் விக்கெட்டை எடுத்த போது மேத்தியூஸை கலாய்க்கும் வகையில் வங்கதேச வீரர் சோரிஃபுல் இஸ்லாம் டைம்ட் அவுட் சைகை செய்து கொண்டாடினார்.

அதனால் கடுப்பான இலங்கை வீரர்கள் கடைசியில் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற போது ஒன்றாக சேர்ந்து டைம்ட் அவுட் சைகை செய்து கொண்டாடி வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால் அதை ஜீரணிக்க முடியாத வங்கதேச கேப்டன் நஜமுல் சாண்டோ “இன்னும் அந்த சம்பவத்திலிருந்து வெளிவராமல் வெறித்தனமாக கொண்டாடும் இலங்கை அணியினர் நிகழ்காலத்திற்கு வர வேண்டும்” என்று நல்லவர்கள் போல விமர்சித்தார்.

- Advertisement -

அப்போது நாங்கள் அதிலிருந்து வெளியே வந்தும் நீங்கள் முதல் போட்டியில் இப்படி செய்ததாலேயே கடைசியில் பதிலடி கொடுத்ததாக இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் தெரிவித்தார். அதனால் அனைத்தும் முடிந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒருநாள் தொடருக்கான கோப்பையை வென்ற பின் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது வங்கதேச வீரர் முஸ்பிக்கர் ரஹீம் ஓரமாக இருந்த ஹெல்மெட்டை எடுத்து வந்து “இது பழுதாக இருக்கிறது. யாராவது சரி செய்யுங்கள்” என்ற வகையில் தன்னுடைய அணி வீரர்களிடம் கேட்டார்.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான பிறகு ரோஹித்திடம் பேசுனீங்களா? – பாண்டியா அளித்த பதில்

அதற்கு “இங்கே யாரும் பழுது செய்வதில்லை” என்று வங்கதேசம் அணியினர் அவரிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அதைத்தொடர்ந்து தலையை தொங்க போட்டுக்கொண்டே சென்ற ரஹீம் ஹெல்மெட்டை ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் வந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அந்த வகையில் நல்லவர்களைப் போல் நடித்து பழசை மறக்குமாறு அறிவுரை செய்த வங்கதேச வீரர்கள் மீண்டும் மேத்தியூஸை கலாய்க்கும் வகையில் இப்படி நடந்து கொண்டுள்ளது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement