மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான பிறகு ரோஹித்திடம் பேசுனீங்களா? – பாண்டியா அளித்த பதில்

Pandya-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடப்போகும் 10 அணிகளும் போட்டி போட்டு தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை வாங்கியிருந்தனர். மேலும் இந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாகவும் சில வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பெரிய தொகை கொடுத்து தங்களது அணிக்கு வாங்கியதோடு சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்தது.

- Advertisement -

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன் பதிவு வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்ப்படுத்திய வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த மாற்றம் குறித்து நிறையவே விமர்சனம் செய்திருந்தனர்.

ஆனால் ஒருபுறம் ஹார்டிக் பாண்டியா இதைப்பற்றி எவ்வித கருத்தையும் பேசாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புதிய கேப்டன் ஹார்திக் பாண்டியா ரோஹித் சர்மா குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மாவின் கை இந்த சீசன் முழுவதும் என் தோளில் இருக்கும் என்று எனக்கு தெரியும். அவரது கேப்டன்சியின் கீழ் நான் 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்று கூறினார். மேலும் கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித்துடன் பேசினீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாண்டியா கூறுகையில் : ஆமாம் மற்றும் இல்லை.

இதையும் படிங்க : ஜடேஜாவை மாற்ற நான் முட்டாள் இல்ல.. தமக்கு இந்திய கேப்டன்ஷிப் கிடைக்காததன் காரணம் பற்றி அஸ்வின்

அவர் இந்திய கேப்டனாக அதிகப்படியான சுற்றுப் பயணங்களை சமீபத்தில் மேற்கொண்டதால் அவருடன் பேச எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் மும்பை அணியுடன் இணையும்போது நிச்சயம் நான் பேசுவேன் என பாண்டியா மழுப்பலான பதிலை கூறியுள்ளார். ஏற்கனவே ரோகித் பதவி நீக்கத்தால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement