ஜடேஜாவை மாற்ற நான் முட்டாள் இல்ல.. தமக்கு இந்திய கேப்டன்ஷிப் கிடைக்காததன் காரணம் பற்றி அஸ்வின்

R Ashwin 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் டெஸ்ட் தொடரில் நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது போட்டியில் விளையாடி 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து இந்தியாவுக்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்த அவருக்கு சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு வாரியம் சார்பில் ஸ்பெஷல் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

முன்னதாக 2010இல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அஸ்வின் தன்னுடைய திறமையால் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார். அப்படியே 2017 வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக விளையாடி வந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நிலையாக விளையாடுகிறார். ஆனால் அதிலும் வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் அவரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற போட்டிகளில் பெஞ்சில் அமர வைத்து வருகிறது.

- Advertisement -

அஸ்வின் ஆதங்கம்:
அப்படி பிளேயிங் லெவனில் கூட நிலையான வாய்ப்பு கிடைக்காததால் 500 விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை அஸ்வினுக்கு கேப்டன்ஷிப் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மன்கட் போன்ற சர்ச்சையான விஷயங்களை ஆழமாக பேசும் தம்மை “அதிகப்படியாக சிந்திப்பவர்” என்று தேர்வுக்குழுவினர் கருதுவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

அதனாலேயே தமக்கு இதுவரை கேப்டன்ஷிப் கிடைக்காமல் இருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் அதற்கு ஜடேஜாவை எடுத்துக்காட்டாக வைத்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறைகள் உள்ளன. எனக்கு வேலை செய்த ஒரு முறை ஜடேஜாவுக்கு வேலை செய்யாது. கிரிக்கெட் சமூகம் அதை மிகவும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறது. அது முற்றிலும் உடைந்தால் ஒழிய அவர்கள் அதை சரி செய்ய முயற்சிக்க மாட்டார்கள்”

- Advertisement -

“ஆனால் நான் காயமடைந்தால் அது பெரிதாவதற்கு முன்பாகவே பள்ளியில் இருந்து வந்து தையல் போட்டுக்கொண்டு அதிகம் உடையாமல் இருப்பதை விரும்புகிறேன். அது ஏன் நடக்கிறது? அது தான் மக்கள் அடையாளம் காணத் தவறும் கேள்வியாகும். அவர்கள் எதையாவது பேச வேண்டும் என்று நம்புவதற்கு முன்பாக நான் உரையாற்றுகிறேன். ஏனெனில் அவர்களின் பயணம். வேறு என்னுடையது வேறு. மற்றவர்களுக்கு 5 வாய்ப்புகள் கிடைத்தால் எனக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும்”

இதையும் படிங்க: சிஎஸ்கே பிளான்.. ராயுடு இடத்தை நிரப்ப அந்த இந்திய வீரரை ரெடி பண்ணிட்டு இருக்கோம்.. ஹசி பேட்டி

“இதற்காக நான் நாளை அணியை வழி நடத்தினால் என்னுடைய பவுலிங் ஆக்சனை மாற்றுவேன். அல்லது ஜடேஜாவிடம் சென்று உங்களின் பவுலிங் ஆக்சனை மாற்றுங்கள் என சொல்வேன் என்று அர்த்தமல்ல. நான் அந்தளவுக்கு முட்டாள் இல்லை. அந்த வகையில் நான் ஒரு கேப்டனாக பொருந்த மாட்டேன் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது நியாயமற்ற மதிப்பீடு” என்று கூறினார்.

Advertisement