சிஎஸ்கே பிளான்.. ராயுடு இடத்தை நிரப்ப அந்த இந்திய வீரரை ரெடி பண்ணிட்டு இருக்கோம்.. ஹசி பேட்டி

Mike Hussey
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 17வது முறையாக வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாடு தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில் பெங்களூருவை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்லும் பயணத்தை சென்னை வெற்றியுடன் துவக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக கடந்த வருடம் அம்பத்தி ராயுடு, ரகானே, சிவம் துபே, துசார் தேஷ்பாண்டே போன்ற வீரர்களை வைத்தே தோனி தலைமையில் சிறப்பாக விளையாடிய சென்னை 5வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் கடந்த வருடத்துடன் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றார். எனவே அவருடைய இடத்தில் புதிதாக வாங்கப்பட்ட நியூசிலாந்தின் டார்ல் மிட்சேல் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ராயுடுவுக்கு பதிலாக:
ஆனால் அவர் வெளிநாட்டு வீரராக இருப்பதால் பிளேயிங் லெவனில் நேரடியாக சேர்ப்பது அணியின் சமநிலையை பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக புதிதாக வாங்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வியை தயார் செய்து வருவதாக சென்னை அணையின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வி கடந்த வருடம் நடந்த உள்ளூர் யூபி டி20 தொடரில் 2 சதங்கள் உட்பட 455 ரன்களை 50 என்ற சராசரியில் குவித்தார். அப்படி உள்ளூர் தொடர்களில் அதிரடியாக விளையாடியதால் 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவரை விரைவில் சென்னை அணியில் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கும் ஹசி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் அந்த வேலையை செய்வார் என்று நினைக்கிறேன். அதிக அனுபவம் கொண்ட அம்பத்தி ராயுடு நீண்ட காலம் விளையாடினார்”

- Advertisement -

“மறுபுறம் ரிஸ்வி இப்போது தான் ஐபிஎல் கேரியரை துவங்க உள்ளார். எனவே ராயுடு கடந்த பல வருடங்களாக செய்ததை அவர் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக அவரை நாங்கள் முன்னேற்றுவதற்கான வேலைகளை துவக்கியுள்ளோம். அவரிடம் இயற்கையாக திறன் இருக்கிறது. எனவே இது எந்த அளவுக்கு செல்கிறது என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : தோனியின் சென்னை அணிக்கு – தவானின் பஞ்சாப் சவால் விடுமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

“இயற்கையாக பந்தை அதிரடியாக எதிர்கொள்ளக் கூடிய அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன். நேற்று தான் நான் அவரை முதல் முறையாக பார்த்தேன். திறமையுடைய இளம் வீரராக தெரியும் அவருடன் இணைந்து வேலை செய்ய உள்ளேன். அவருக்கு இந்தத் தொடரிலும் வருங்காலங்களிலும் அசத்துவதற்கு தேவையான முன்னேற்றத்தை பேட்டிங்கில் காண்பதற்கு உதவ உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement