ஹார்டிக் பாண்டியாவுக்கு மும்பை வைத்த செக்.. ரோஹித் சர்மாவிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

Rohit-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கைப்பற்றி அசத்தியது.

ரோஹித் சர்மாவிற்கு அடித்த ஜாக்பாட் :

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள வேளையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே ஐபிஎல் அணி நிர்வாகம் கெடுவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களை இறுதிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஐ.பி.எல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அந்தவகையில் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் அந்த அணி இயங்கினாலும் ரோகித் சர்மாவிற்கு அதிக தொகை அளித்து தக்கவைக்க நினைக்கிறது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

- Advertisement -

அதன் காரணமாக அவரை விடுவிக்க முன்வராத மும்பை அணி நிர்வாகம் அவரை முதல் வீரராக அதிக தொகைக்கும் நான்காவது வீரராக பாண்டியாவை அதே தொகைக்கோ அல்லது சற்று குறைவான தொகைக்கு தக்க வைக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இப்படியா பழி வாங்குவீங்க? கோலியை வைத்து ட்வீட்.. ஃபகார் ஜாமனுக்கு பாகிஸ்தான் வழங்கிய 2 தண்டனை

மேலும் அந்த அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் மேலும் ஒரு இளம் வீரரை அந்த அணி தக்கவைக்க நினைக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement