இப்படியா பழி வாங்குவீங்க? கோலியை வைத்து ட்வீட்.. ஃபகார் ஜாமனுக்கு பாகிஸ்தான் வழங்கிய 2 தண்டனை

Fakhar Zaman
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய 2024 – 25 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர் ஃபக்கார் ஜமான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் சதமடித்த அவர் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

மேலும் 2023 உலகக் கோப்பையிலும் சதமடித்த அவர் முடிந்தளவுக்கு பாகிஸ்தானின் வெற்றிக்கு பாடுபட்டார். அந்த சூழ்நிலையில் மற்றொரு நட்சத்திர வீரர் பாபர் அசாம் சமீப காலங்களில் மிகவும் மோசமாக விளையாடி வந்தார். குறிப்பாக 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

விராட் கோலியை வைத்து:

அதனால் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்திக்கவும் அவர் முக்கிய காரணமாக அமைந்தார். அதன் காரணமாக பொறுமையிழந்த பாகிஸ்தான் வாரியம் அவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து கழற்றி விட்டது. அப்போது 2019 – 2023 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 30க்கும் குறைவான சராசரியில் பேட்டிங் செய்ததாக ஃபக்கார் ஜமான் ட்விட்டரில் பதிவிட்டார்.

ஆனால் அப்போது விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைக்கவில்லை என்றும் அவர் கூறினார். எனவே நாமும் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாமை ஒதுக்குவது சரியல்ல என்று ஃபக்கார் ஜாமான் பாகிஸ்தான் வாரியம் எடுத்த முடிவுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டார். ஆனால் அப்படி விராட் கோலியை வைத்து தங்களையே எதிர்த்து பேசியதால் பாகிஸ்தான் வாரியம் கோபமடைந்தது.

- Advertisement -

பழி வாங்கிய வாரியம்:

மேலும் பாகிஸ்தான் வாரியம் எடுக்கும் முடிவை தற்போது விளையாடும் ஒரு வீரர் பொதுவெளியில் விமர்சிப்பது விதிமுறையை மீறிய செயலாகும். அதனால் அதற்கு விளக்கம் கொடுக்குமாறு அடுத்த சில நாட்களில் ஜமானுக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட அவரும் நேரில் சென்று நிலைமையை எடுத்துரைத்து மன்னிப்பும் கேட்டதாக செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: தல தோனி, ரோஹித், கோலி உட்பட.. 10 அணிகளின் டாப் உத்தேச ரிட்டன்சன் பட்டியல் இதோ

இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத பாகிஸ்தான் வாரியம் தங்களையே விமர்சித்ததால் தற்போது மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஜமானை நீக்கியுள்ளது. அத்துடன் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியிலும் ஃபக்கார் ஜமான் கழற்றி விடப்பட்டுள்ளார். மொத்தத்தில் மனதில் வைக்காமல் ட்வீட் போட்டதற்காக அவருக்கு பாகிஸ்தான் வாரியம் 2 தண்டனை கொடுத்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இப்படியா பழி வாங்குவீங்க? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement