ஐபிஎல் 2025: தல தோனி, ரோஹித், கோலி உட்பட.. 10 அணிகளின் டாப் உத்தேச ரிட்டன்சன் பட்டியல் இதோ

IPL Teams
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது ஆர்டிஎம் விதிமுறையை பயன்படுத்தி ஏலத்தில் வாங்க முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

அதனால் அனைத்து அணிகளும் தங்களுடைய தக்க வைக்கும் வீரர்களை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் உத்தேச வீரர்களின் பட்டியலை பற்றி பார்ப்போம்.
1. மும்பை: வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் மற்றும் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை தக்க வைக்க உள்ளது. அவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5வது வீரராக திலக் வர்மாவையும் மும்பை தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ரிட்டன்சன் லிஸ்ட்:

2. சென்னை: மற்றொரு வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைத்துள்ளது. அவருடன் கேப்டன் ருதுராஜ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, குட்டி மலிங்காவாக கருதப்படும் மதிசா பதிரனா தக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. கொல்கத்தா: நடப்புச் சாம்பியன் கொல்கத்தா பேட்டிங்கில் சுமாராக செயல்படும் தங்களுடைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விடும் என்று எதிர்பார்ப்படுகிறது. ஆண்ட்ரே ரசல், மிட்சேல் ஸ்டார்க், சுனில் நரேன், ரிங்கு சிங், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகிய ஐவரை தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
4. பெங்களூரு: ஆர்சிபி அணி முதலில் விராட் கோலியை கேப்டனாகவே தக்க வைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

டாப் வீரர்கள்:

ஆனால் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் கழற்றி விடப்பட்டு முகமது சிராஜ், யாஷ் தயாள் தக்க வைக்க வாய்ப்புள்ளது.
5. குஜராத்: குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், ரசித் கான், தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோரை தக்க வைக்க உள்ளது. அவர்களுடன் சாருக்கான், ராகுல் திவாடியாவும் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
6. ஹைதெராபாத்: சன் பிரைசஸ் ஹைதராபாத் அணி ஹென்றிச் க்ளாஸென், கேப்டன் பட் கமின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி ஆகியோரை தக்க வைக்க பிரகாச வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: விராட், ரோஹித் முடிஞ்சு போனவங்க.. ஆஸி அந்த 2 இந்திய வீரர்களை சாய்க்கனும்.. இயன் சேப்பல், மார்க் டெய்லர்

7. டெல்லி: ரிஷப் பண்ட் சந்தேகமாக காணப்படும் நிலையில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரை டெல்லி கேப்பிட்டல்ஸ் உறுதியாக தக்க வைக்கலாம்.
8. ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர் காயத்தால் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்படும் நிலையில் ராஜஸ்தான் கண்டிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக்கை தக்க வைக்கலாம்.
9. லக்னோ: கேஎல் ராகுல் வெளியேற தயாராகியுள்ள நிலையில் நிக்கோலஸ் பூரான், மயங் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோரை உறுதியாக தக்க வைக்கலாம்.
10. பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங் தவிர்த்து மற்றவர்களை பஞ்சாப் கழற்றி விட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement