LSG vs MI : இது என்னடா சாம்பியன் டீமுக்கு வந்த சோதனை. லக்னோ அணிக்கு எதிராக மோசமான ரெக்கார்டு – விவரம் இதோ

MI vs LSG
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக (5முறை) சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற 63-வது லீக் போட்டியில் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதோடு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அற்புதமான வாய்ப்பையும் வீணடித்து தற்போது மும்பை அணி தனக்குத்தானே ஆபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதன்படி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 177 ரன்கள் குவித்தது.

பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது இறுதி வரை போராடி 172 ரன்களை மட்டுமே அடித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணியாக இருந்தும் புதிதாக வந்த அணியிடம் ஒரு மோசமான சூழலை சந்தித்துள்ளது.

Mumbai Indians Rohit Sharma MI

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறையும் தோல்வியை சந்தித்திருப்பதால் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ஐபிஎல் முதல் இன்டர்நேஷனல் வரை கில்லியாக சொல்லி அடிக்கும் சுப்மன் கில் – வேறு யாரும் படைக்காத தனித்துவ சாதனை

ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இப்படி லக்னோ அணிக்கு எதிராக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement