5 ரன்ஸ்.. ஐபிஎல் போல பாண்டிங் வேதனை.. வெற்றியை பறித்த எம்ஐ.. சிஎஸ்கே போல அமெரிக்காவில் சாதனை

MLCT20 2025
- Advertisement -

அமெரிக்காவில் 2025 மேஜர் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்ற வாஷிங்டன் ஃபிரீடம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ அணி 20 ஓவரில் 180/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் அரை சதத்தை அடித்து 77 (46) ரன்கள் குவித்தார். அவருடன் மோனக் படேல் 28, கேப்டன் பூரான் 21, குன்வர்ஜீத் சிங் 22* (13) ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் அணிக்கு லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வாஷிங்டன் ஏமாற்றம்:

அடுத்ததாக விளையாடிய வாஷிங்டன் அணிக்கு மிட்சேல் ஓவன், ஆண்ட்ரிஸ் கௌஸ் அடுத்தடுத்து ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் டக் அவுட்டானார்கள். அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடினார். எதிர்புறம் வந்த ஜாக் எட்வர்ட்ஸ் அவருடன் சேர்ந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 33 (22) ரன்னில் அவுட்டானார்.

இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரவீந்தரா அரை சதத்தை அடித்து 70 (41) ரன்கள் குவித்த போது ருசில் உகர்கர் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மிடில் ஆர்டரில் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். எதிர்ப்புறம் வந்த கேப்டன் கிளன் மேக்ஸ்வெல் தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். இறுதியில் ருசில் அகர்கர் வீசிய கடைசி ஓவரில் வாஷிங்டன் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

எம்ஐ நியூயார்க் சாம்பியன்:

அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் மேக்ஸ்வெல் விக்கெட்டை 15 (16) ரன்களில் எடுத்து அசத்தினார். அதனால் கிளன் பிலிப்ஸ் 48* (34) ரன்களை எடுத்தும் 20 ஓவரில் 175/5 ரன்கள் மட்டுமே எடுத்த வாஷிங்டன் பரிதாபமாக தோற்றது. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் பயிற்சியாளராக இறுதிப்போட்டி வரை சென்று தோற்ற ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இங்கேயும் ஃபைனல் வரை சென்று ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

இதையும் படிங்க: ராகுல் டிராவிட்டின் 23 வருட சாதனையை உடைத்த கேப்டன் சுப்மன் கில்.. இங்கிலாந்தில் மாபெரும் வரலாற்று சாதனை

மறுபுறம் 5 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது. ஏற்கனவே அந்த அணி 2023 கோப்பையையும் வென்றுள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் 2 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சிஎஸ்கே சாதனை படைத்தது போல அமெரிக்காவில் எம்ஐ நியூயார்க் அணி சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ருசில் உகர்கர் 2, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.

Advertisement