பாண்டியாவிற்கு எதிரா யாரவது கத்தினா அவரை வெளியே அனுப்புங்க.. மும்பை அணி எடுத்துள்ள முடிவு – ரசிகர்கள் அதிருப்தி

MI
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து பின்னடைவை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த சாம்பியன் கேப்டன் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்ததிலிருந்து மும்பை அணிக்குள் விரிசல் விழுந்தது.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த கேப்டன்சி மாற்றம் பெரியளவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு மும்பை அணி எங்கு சென்று விளையாடினாலும் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியிலும் சரி, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியிலும் சரி ரோகித் சர்மாவிற்கும் ஆதரவாகவும், ஹார்டிக் பாண்டியாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்த செய்தி, வீடியோ என அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் “ஒன் பேமிலி” என்கிற அடைமொழியுடன் திகழ்ந்துவரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்காக முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் போதும் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராக எந்த கோஷமும் வரக்கூடாது என்பதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.

- Advertisement -

அப்படி கேப்டன் பாண்டியாவிற்கு எதிராக குரல் எழுப்பும் ரசிகர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக கண்காணித்து காவலர்கள் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மைதான நிர்வாகமும் மும்பை அணிக்கு இந்த விடயத்தில் உதவி செய்யும் என்பதனால் பாண்டியாவிற்கு எதிராக மைதானத்தில் ஏதேனும் கோஷம் இருப்பினும் அவர்களை உடனடியாக காவலாளிகளை வைத்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சொன்னது வேற.. செய்ஞ்சது வேற.. பும்ராவை மதிக்காத பாண்டியா – அணியில் ஏற்படவுள்ள விரிசல்

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் வான்கடே மைதானத்தில் மட்டும் மற்ற அணிகளின் ஜெர்சியுடன் வரும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது பாண்டியாவிற்கு எதிராக கோஷமிடும் ரசிகர்களையும் வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement